ஜோதிட அதிசயம்: 30 வருடங்களுக்கு பின் இணையும் சனி-புதன்; பின்வரும் இந்த 3 ராசிக்காரர்களின் காட்டில் பணமழை! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
1/6ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஏப்ரல் 11 அன்று இரவு 1:16 மணியளவில் புதன் பகவான் மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். ஏற்கனவே மீன ராசியில் சனி பகவான் அமர்ந்திருப்பதால், இந்த புதன்-சனி சேர்க்கை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
2/6இந்த கிரக சேர்க்கையானது ரிஷப ராசியினரின் 11-வது வீட்டில் நிகழ்ந்துள்ளதால், இவர்களின் வருமானமும் வங்கி இருப்பும் கணிசமாக உயரும். தொழில் வளர்ச்சியில் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டு, நீண்டகாலப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
3/6மிதுன ராசியின் ஆளும் கிரகமே புதன் என்பதால், இந்த சேர்க்கை அவர்களுக்கு சிறந்த அறிவாற்றலையும் தைரியத்தையும் கொடுக்கும். இவர்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக முன்னேற்றம் உண்டாவதுடன், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தொல்லைகளும் நீங்கும்.
4/6தனுசு ராசியினருக்கு இந்த சனி-புதன் சேர்க்கையால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாக போகிறது. சனியின் கனிவான பார்வையால் இதுவரை இல்லாத அளவுக்கு இவர்களின் வருமானம் உயர்வதோடு, தொழில் வாழ்க்கையில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைகளும் தீரும்.
5/6இந்த 3 ராசிக்காரர்களுக்கும் சமூகத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். புதன் பகவானின் ஆசியால் இவர்களது தன்னம்பிக்கை மற்றும் நினைவாற்றல் மேம்பட்டு, பணியிடத்தில் சக ஊழியர்களுடனான உறவு சுமூகமாக இருக்கும்.
6/6இந்த அரிய இணைப்பின் விளைவாக, இந்த மூன்று ராசியினருக்கும் பொருளாதார மற்றும் தொழில் ரீதியில் உச்சகட்ட பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத திடீர் பணவரவுகள் மற்றும் புதிய வருமான வழிகள் இவர்களுக்குத் திறக்கப்படும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.