Saturn Transit 2025 in Pisces: வருகிற மார்ச் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் 12 ராசிகளின் நிலையும் மாற உள்ளது. இதில் எந்த ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்க உள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வருகிற 29ஆம் தேதி இரவு சனி பெயர்ச்சி ஆகும். அந்நாளில் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
சனி பகவான் வரும் மார்ச் 29 ஆம் தேதி இரவு 10:07 மணிக்கு மீன ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைவார். இந்த சனிப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மீன ராசியில் சனியின் இந்தப் பெயர்ச்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப்போகிறது.
சனியின் பெயர்ச்சி மீன ராசியில் குடியேறுவது பஞ்சமகா யோகத்தை உருவாக்கும். மேலும் சந்திரனின் அதிபதி ராசியான மீன ராசியில் வசிப்பார். இந்த அரிய யோகத்தின் பலனால், மிதுனம், கும்பம் உள்ளிட்ட 5 ராசிகளின் அதிர்ஷ்டம் பெருகும். வேலையில் வளர்ச்சியுடன், பதவி உயர்வு கிடைக்கலாம். இந்த 5 அதிர்ஷ்ட எவை என்று பார்ப்போம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் சாதகமான பலனைத் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். நிலம் வாங்கலாம். தொழிலில் வெற்றி கிடைக்கும், இதனால் லாபம் பெருகும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சாதகமாக சூழல் நிலவும். தொழிலில் அனுகூலம் நிலைத்திருக்கும். வேலையில் ஆறுதலையும், நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் பெரிய மாற்றம் ஏற்படுத்தி தரும். பணி இடத்தில் மேன்னேற்றம் கிடைக்கும். கௌரவம் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வணிகம் வர்த்தகத்தில் லாபம் தேரும். பங்குச் சந்தையில் முதலீடு நன்மையை தரும். பதவி உயர்வு கிடைக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம், இந்த பயணத்தால் நன்மை உண்டாகும், முதலீடு லாபத்தை தரும். வேலையில் ப்ரமோஷன் கிடைக்கும். வாகனம் ஓட்டும்போதும், சாலையில் கவனமாக தேவை.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெருகும். கௌரவம் உயரும். வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் நன்மைகள் உண்டாகும். மார்ச் 29கக்கு பிறகு மிகப்பெரிய பண லாபத்தை ஈட்டும் வாய்ப்பை பெறுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.