சனி பெயர்ச்சி 2025: கர்ம காரகர் என அழைக்கப்படும் சனி பகவான், வரும் 29ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் சிலர் ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாதிப்பு குறையும், சிலருக்கு அதிகரிக்கும், சிலர் இதிலிருந்து விடுபடுவார்கள்.
சனிப்பெயர்ச்சிக்கும் எழரை நாட்டு சனிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதோடு, சனிபகவானின் பார்வை, அவர் இருக்கும் நிலை ஆகியவை காரணமாக, மேஷத்தில் இருந்து மீனம் வரை, உள்ள அனைத்து ராசிகளுக்கும் லாப பலன்கள் அல்லது கெடு பலன்கள் இருக்கலாம்.
மேஷ ராசியினருக்கு சனி பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, ஏழரை நாடு சனியின் விரய சனி காலம் ஆரம்பமாகிறது. துணிச்சலுடன் எதிலும் ஈடுபட தோன்றும். இதனால் அனுகூலமும் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பேச்சில் தன்மை அவசியம். அறுபடை முருகன் கோவிலுக்கு அறுவடை முருகன் கோவிலில், உங்கள் இடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு, அடிக்கடி சென்று வருவது சனிபகவானின் அருளை பெற உதவும்.
ரிஷப ராசியினருக்கு சனி பெயர்ச்சியில், மனதில் தெளிவு பிறக்கும். இந்தக் கடமை உணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வீடு மனை வாங்கும் யோகம் வரலாம். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். காரியங்களில் தடை ஏற்பட்டாலும், உங்கள் சாதுரியத்தால் அனைத்தையும் வெற்றி கொள்வீர்கள். திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்வது, சிறந்த பரிகாரமாக இருக்கும்.
மிதுன ராசியினருக்கு, சனி பகவானின் அருளால், பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உழைப்பால் உயர்ந்து, பாராட்டுக்களை பெறுவீர்கள். வேலையின் தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாராத நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். பரிகாரமாக ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி வர, நன்மைகள் வாழ்வில் பெருகும்.
கடக ராசியினருக்கு சனி பெயர்ச்சியினால், அஷ்டம சனி விலகும். அதனால் மனதில் இருக்கும் சஞ்சலம் குழப்பம் நீங்கி நிம்மதி கிடைக்கும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வாக்குச் சாதுரியத்தால் உங்களிடம் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புற்று இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று, வேப்பிலை சாற்றி வணங்கி வருவதால், நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும்.
சிம்ம ராசியினருக்கு சனி பெயர்ச்சி காரணமாக அஷ்டம சனி ஆரம்பம் ஆகிறது. இதனால் சில தடைகள் ஏற்படும் என்றாலும், குரு பகவான் அருள் காரணமாக, தடைகள் நீங்கி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனங்கள் தொடர்பாக செலவு அதிகரிக்கலாம். பொதுவாக சிந்தித்து செயல்படுவது நல்லது. தினந்தோறும் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வணங்குவதும், முடிந்தால் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும் இன்னல்கள் தீர உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
கன்னி ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி காரணமாக கடினமான சூழ்நிலையில் இருந்து விடுபடும் நிலை ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் காரியங்கள் நிறைவேறும். தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வருவதும், வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கும், தக்ஷிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை சாற்றுவதும் பலனளிக்கும்.
துலாம் ராசியினருக்கு சனி பகவான், பண வரவையும் அள்ளிக் கொடுப்பார். உங்களின் செயல்கள் பாராட்டை பெற்று தரும். எனினும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் தேவை. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். ஆனால் உங்கள் செயல்திறனால், எளிதில் சவால்களை வெல்வீர்கள். கெடு பலன்கள் நீங்க, குலதெய்வத்தை வணங்கி வருவது சிறந்த பரிகாரமாக இருக்கும்.
விருச்சிக ராசியினருக்கு, அர்த்தாஷ்டம சனி காலம் முடிந்து, நல்ல காலம் தொடங்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுப காரியங்களுக்காக செலவுகள் செய்ய நேரிடும். குழந்தைகள் தரப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் கூடும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனை பூஜை செய்து வழிபட, தடைகளும் எதிர்ப்புகளும் விலகும்.
தனுசு ராசிக்கு, அர்த்தாஷ்டம காலம் தொடங்குவதால், உடலில் சோர்வு பலவீனம் உண்டாகலாம். வருமானம் சீராக இருக்கும். ஆனால் அளவிற்கு அதிகமாக செலவு செய்வதால், கடன் வாங்கும் நிலை ஏற்படக்கூடும். இதனால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிந்தித்து செயல்படுவதன் மூலம், பலவித பிரச்சனைகளை தவிர்க்கலாம். பொதுவாக நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்வது, இன்னல்களைப் போக்கி இன்பம் அளிக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
மகர ராசியினருக்கு, ஏழரை நாட்டு சனி காலம் முடிவடைவதால், மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நிறைவேறும். பண வரவு சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மையினால் காரியத்தை சாதிப்பீர்கள். எனினும் உடல் ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது, வாழ்க்கையில் சந்திக்கும் தடைகளை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
கும்ப ராசியினருக்கு சனி பெயர்ச்சி காரணமாக, ஜென்ம சனி காலம் முடிவடைந்து, பாத சனி காலம் தொடங்குகிறது. இதனால் பல நற்பலன்கள் கிடைப்பதோடு மனதில் துணிச்சலும் நம்பிக்கையும் உண்டாகும். பண வரவு காரணமாக கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதி பிறக்கும். ஆடம்பர பொருட்களுக்காக செலவு செய்வீர்கள். விநாயகப் பெருமானை வணங்குவது, துன்பங்கள் நீங்கி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவும்.
மீன ராசியினருக்கு, சனிப்பெயர்ச்சி காரணமாக, ஜென்ம சனி காலம் தொடங்குகிறது. இதனால் மீன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆனால் குரு பகவானின் அருளால் மனதில் தெளிவு உண்டாகும். இதனால் பிரச்சனையை எளிதாக கையாளலாம். கோபத்தை குறைப்பது பல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வருவது பலனளிக்கும். ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க, அன்னதானங்கள் செய்வது சிறந்த பரிகாரமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.