சனி பெயர்ச்சி 2025... ஏழரை நாட்டுச் சனியில் சிக்கும் ராசிகளும்... சில எளிய பரிகாரங்களும்

சனிப்பெயர்ச்சி 2025: நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான் நீதிக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் மிக முக்கியமான பெயர்ச்சிகளில் ஒன்று சனிப்பெயர்ச்சி.

கர்மவினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வரன், ஏழரை நாட்டு சனி, சனி திசை, அஷ்டம சனி போன்ற காலகட்டங்களில், பாதிக்கப்பட்ட ராசிகளுக்கு துன்பங்களையும் சோதனைகளையும் கொடுப்பார். இன்னும் சில எளிய பரிகாரங்கள் மூலம் அவரின் தீய பார்வையை சாந்தப்படுத்தலாம்.

 

1 /10

சனிப்பெயர்ச்சி 2025: மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றிக் கொள்கிறார். சனி பெயர்ச்சி ஏழை நாட்டு சனி காலம், அஷ்டம சனி காலம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது.  

2 /10

ஏழரை நாட்டு சனி: சனி பகவான் எந்த ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் என்பதை பொறுத்து ஏழரை நாட்டு சனி தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் சனிபகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் நிலையில், மீன ராசிக்கு ஜென்ம சனியும், கும்ப ராசிக்கு பாத சனியும், மேஷ ராசிக்கு விரய சனி காலமும் தொடங்கும்.

3 /10

சனியைப் போல கெடுப்பாறும் இல்லை கொடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள். அந்த வகையில் சனிபகவானை திருப்தி படுத்த செய்யும் பரிகாரங்கள் மூலம், அவரது மனதை குளிர்வித்து, அவரது அருளை பரிபூரணமாக பெற்று கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.

4 /10

அன்னதானம்: கடின உழைப்பாளிகளையும், கருணை மனம் படைத்தவர்களையும் சனி பகவான் சோதிப்பதில்லை. அவர்களுக்கு கஷ்டங்களை கொடுத்தாலும், கருணையுடன் அவரைக் காப்பாற்றுவார். எனவே ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதும், சோம்பல் இல்லாமல் கடுமையாக உழைப்பவர்களுக்கும் சனி பகவானின் அருள் கிடைக்கும்.  

5 /10

விலங்குகளுக்கு உணவளித்தல்: மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களிடமும், கருணையுடன் இருப்பவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். கண்ணுக்குத் தெரியாத எலும்புகளுக்கு உணவளித்தது சுமார் 1000 பேருக்கு உணவளித்ததற்கு சமம் என்கின்றனர் சாஸ்திரங்கள்.

6 /10

வன்னி மர வழிபாடு: வன்னி மரத்தை வழிபடுவதன் மூலம் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தை பெருமளவு குறைக்கலாம். எனவே வீட்டில் வன்னி மர செடியை நட்டு அதனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் தீய சக்திகள் அழிந்து நல்ல காலம் பிறக்கும்.  

7 /10

சனிபகவான் வழிபாடு: சனிபகவானை நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவதும், அருகில் உள்ள கோவிலில் உள்ள சனீஸ்வரன் சன்னதியில் வழிபடுவதும், சனி மந்திரங்களை ஜெபிப்பதும், கெடு பலன்களை குறித்து நல்ல பலன்களை கொடுக்கும்.

8 /10

நீலமணி ரத்தினம்: ஏழரை நாட்டு சனியில் ஏற்படும் பாதிப்புகள் குறையவும், வாழ்க்கையில் சந்தித்து வரும் இன்னல்களும் துன்பங்களும் மறையவும், நீலவனி ரத்தினம் அணியலாம் என்கின்றனர் ஜோதிடர்கள். நீலக் கல்லை வெள்ளி அல்லது பிளாட்டினத்தில் பதித்து அணிவதால் மட்டுமே, சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

9 /10

10 /10

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.