Sani Peyarchi Palangal: மார்ச் 29 சனி பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வு இது. இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2025: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபப்டுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. அனைத்து பெயர்ச்சிகளிலும் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகவும் முக்கியமான கிரகமாகவும் உள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் சுமார் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். ஒரே ராசியில் அவர் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
மார்ச் 29, 2025 அன்று இரவு 22:07 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியை விட்டு குரு பகவானின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பெயர்ச்சி 2025 -க்கு பிறகு சில ராசிகள் ஏழரை சனியின் பிடியில் சிக்குவார்கள். சில ராசிகளுக்கு ஏழரை சனியின் பிடியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஏழரை சனி மட்டுமில்லாமல் சனியின் பார்வை படும் சில இடங்களில் இருக்கும் ராசிகள் மீதும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும்.
சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளின் வாழ்க்கை சனி பெயர்ச்சி 2025 -க்கு பின் மாற்றம் காணும். இவர்கள் வாழ்வில் தடைகள் நீங்கி சாதனைகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி 2025 மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். மூத்த அதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் சாதகமாக இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கல்வியில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். குழந்தைகளால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம். வணிகத் துறையிலும் அதிக லாபத்தைப் பெறுவீர்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். நீண்ட காலமாக நிலுவையிலிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். உங்கள் துணைவருடன் இருந்து வந்த தகராறு முடிவுக்கு வரும். வணிகத் துறையிலும் உங்களுக்கு லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுடன் நல்ல சம்பள உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரக்கூடும். இந்த காலம் காதல் வாழ்க்கைக்கும் திருமண வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சனியின் செல்வாக்கால் உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். உங்களுக்குப் பிடித்த நபரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள். குழந்தைகளுக்கும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வருமானம் வேகமாக அதிகரிக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். இந்த ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிலவும் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரக்கூடும். வெளிநாடு பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கலாம். பிள்ளைகள் முன்னேற்றம் அடைவார்கள். இது உங்கள் மகிழ்ச்சியைக் கூட்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் ரிஸ்க் உங்களுக்கு வெற்றியைத் தரும்.
கும்பம்: சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்த பிறகு, மீன ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும். செல்வத்தை குவிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உயர்கல்வி கனவையும் நனவாக்க முடியும். இந்த காலத்தில் கடின உழைப்பின் பலன் கிடைக்கும் வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இது தவிர, வெளிநாட்டு வர்த்தகத்திலும் பெரும் லாபம் ஈட்ட முடியும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.