Sani Peyarchi 2025: சனி பகவான் மார்ச் 29, 2025 அதாவது இன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பெயர்ச்சியால் ராசிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன? 12 ராசிகளுக்குமான ராசிபலனை இங்கே காணலாம்.
Sani Peyarchi Palangal: மீன ராசியில் சனி பெயர்ச்சிக்கு பிறகு, சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாதிப்பு நீங்கும். சிலருக்கு இந்த பாதிப்புகள் தொடங்கும். சனி மீனத்தில் பெயர்ச்சி ஆவதால், அதற்கு அடுத்த ராசியான மேஷத்தில் விரய சனி காலம் ஆரம்பம் ஆகும். மீனத்திற்கு முந்தைய ராசியான கும்பத்தில் பாத சனி காலம் தொடங்கும். மீனத்திற்கு ஜென்ம சனி ஆரம்பம் ஆகும். இந்த ராசிகள் தவிர அனைத்து ராசிகளிலும் சனி பெயர்ச்சியின் தாக்கம் இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் சனி பெயர்ச்சியின் தாக்கம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: சனிபகவான் மீனத்தில் பெயர்ச்சி ஆகிறார். ஆகையால், அதற்கு அடுத்த ராசியான மேஷ ராசிக்கு விரய சனி காலம் தொடங்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி 2025 கலவையான பலன்களை அளிக்கும். செலவுகள் அதிகமாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். நீங்கள் செய்யும் தொழிலும் மாறலாம். உரிய பலன்களைப் பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்: சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களை கொண்டு வரும். உங்கள் பணியிடத்தில் பலவித வெற்றிகள் குவியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. அனைவருடனும் உறவுகள் சூதமாக இருக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி அனுகூலமானபலன்களை அளிக்க உள்ளது. உடல்நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கடகம்: இரண்டரை ஆண்டுகளாக, கடக ராசிக்காரர்கள் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதிலிருந்து விடுபடுகிறார்கள். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சகோதரர்கள் சகோதரிகளுடன் விவாதங்கள் செய்ய வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். உங்கள் பேச்சாற்றல் மேன்மை அடையும். பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வேலை கிடைக்க கூடும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. இவர்களுக்கு சனிப்பெயர்ச்சி 2025 சவால்கள் நிறைந்ததாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் கோபத்தை அடக்கி உணர்ச்சிகள் மீது கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதகம் ஏற்படலாம்.
கன்னி: சனிப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும். புதிய வேலைகளை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும்.
துலாம்: சனி பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கலாம். குழந்தைகள் மற்றும் தாயைப் பற்றிய கவலை வரக்கூடும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அனைத்து பணிகளிலும் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம்: சனி பெயர்ச்சி 2025 விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் குழந்தை பாக்கியம் கிட்டும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சவாலான காலமாக இருக்கக்கூடும். பணியிடத்தில் சில கடினமான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடலாம். உங்கள் பணிகள் தாமப்படலாம். இதனால் மன அழுத்தம் வர வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் அதிகப்படியான பொறுமையும் நிதானமும் அவசியம்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை கொடுக்கும். ஏழரை சனியிலிருந்து விடுபடும் காலம் இது. உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உண்மையான ஒத்துழைப்பு இருக்கும்.
கும்பம்: சனி பெயர்ச்சி 2025 -இன் காரணமாக, கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் பாத சனி காலம் தொடங்குகிறது. இதனால், செலவுகள் அதிகரிக்கும். மன உளைச்சல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. செலவுகள் இந்த காலத்தில் அதிகரிக்கலாம் சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் பண வரவை தாண்டி செலவுகள் செல்லக்கூடும். அனைத்து பணிகளிலும் நிதானமும் பொறுமையும் அவசியம்.
மீனம்: மீன ராசியில்தான் சனி பெயர்ச்சி நடக்க உள்ளது. சனி மீன ராசிக்கு செல்லும் நிலையில் அந்த ராசிக்கு சோதனையான காலகட்டமான ஜென்ம சனி காலம் தொடங்கும். நிதானத்துடனும் தெய்வ சிந்தனையுடனும் இந்த காலத்தை கடப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது அதிகப்படியான கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் சிறு சிக்கல்கள் ஏற்படலாம் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அனைத்து முடிவுகளையும் நன்கு ஆலோசித்து பின்னர் எடுப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.