Sani Peyarchi & Ezharai Nattu Sani Effects: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஏழரை நாட்டு சனி காலம் சனி பெயர்ச்சி வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது.
சனி பெயர்ச்சிக்கும் ஏழரை நாட்டு சனிக்கும் நேரடி தொடர்பு உள்ளது. கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், வரும் 2027 ஆம் ஆண்டு முதல் 2032 ஆம் ஆண்டு வரை, பெயர்ச்சி ஆகும் ராசிகளையும், அதனால் பாதிக்கப்பட போகும் ராசிகளையும் அறிந்து கொள்ளலாம்.
சனிப்பெயர்ச்சியும் ஏழரை நாட்டு சனியும்: சனிபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்கும், அதற்கு முன்னாலும் பின்னாலும் வரும் ராசிகளுக்கும் ஏழரை பாதிப்பு இருக்கும். அந்த வகையில் 2027 முதல் 2032 வரை எந்தெந்த ராசிகளுக்கு ஏழரை சனி பாதிப்பு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏழரை நாட்டு சனி: சனீஸ்வரர் இருக்கும் நிலையை பொறுத்து, ஏழரை ஆண்டுகளுக்கு நீடிக்கும் காலமே ஏழரை நாட்டு சனி. முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி என்றும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனி என்றும், அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகள் பாத சனி என்றும் கூறப்படுகிறது. பொதுவாக அனைவருமே ஏழரை நாட்டு சனி என்பது படுத்து எடுக்கும் காலம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல.
சனி பெயர்ச்சி 2025: கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சென்றதன் காரணமாக, மீன ராசிக்கு ஜென்ம சனி காலம் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் மேஷ ராசிக்கு விரய சனியும், கும்ப ராசிக்கு பாத சனி காலமும் இருக்கும்.
சனிப்பெயர்ச்சி 2027: சனிபகவான் 2027 ஜூன் மூன்றாம் தேதி, மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இதனால் மேஷ ராசிக்கு ஜென்ம சனியும், ரிஷப ராசிக்கு விரய சனி காலமும், மீன ராசிக்கு பாதசனிக்காலமும் தொடங்கும்.
சனிப்பெயர்ச்சி 2029: சனீஸ்வரர் 2029 ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி, மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இதனால் ரிஷப ராசிகளுக்கு ஜென்ம சனி காலமும், மேஷ ராசியினருக்கு பாத சனி காலமும், மிதுன ராசிக்கு விரய சனிகாலமும் தொடங்கும்.
சனிப்பெயர்ச்சி 2032: சனிபகவான் 2032 மே மாதம் 31ம் தேதி, ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இதனால் மிதுன ராசிக்கு ஜென்ம சனி காலமும், ரிஷப ராசிக்கு விரய சனி காலமும், கடக ராசிக்கு பாத சனி காலமும் தொடங்கும்.
சனி பரிகாரங்கள்: சனிபகவான் நீதிக் கடவுள். எனவே நல்ல உள்ளம் கொண்டவர்களையும், பிறருக்கு தீங்கு நினைக்காதவர்களையும் படுத்தி எடுக்க மாட்டார். எனவே அன்னதானங்கள், பிறருக்கு உதவுதல் ஆகியவற்றை தவறாமல் செய்து வந்தால், சனிபகவானின் மனது குளிரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.