அதிசயம் செய்யும் சனி பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் கொட்டும்

Sani Peyarchi 2025: ஜோதிட ரீதியாக, 2025 நவம்பர் 28ஆம் தேதி சனி வக்கிர நிவர்த்தி பெறுகிறார். இதனால், மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என சொல்லப்பட்டுள்ளது.
 

1 /7

ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அவற்றின் ராசியை மாற்றி வருகின்றனர். இந்த கிரகத்தின் மாற்றங்களில் பல்வேறு ராசிகளுக்கு நேர்மறையாக ஆற்றலையும், எதிர்மறையான ஆற்றலையும் ஏற்படுத்தலாம். அந்த வகையில், இன்னும் சில நாட்களில் சனி வக்கிர நிவரத்தி பெறுகிறார். அதாவது, நவம்பர் 28ஆம் காலை 9.30 மணிக்கு சனி மீனத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.   

2 /7

சனி பகவான் தனது சொந்த ராசியில் இருந்து வெளியே, மீனத்தில் நுழைவதாக ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சனிபகவன் மீன ராசியில் தான் இருப்பார். இதனால், பல ராகிளுக்கு சனி பெயர்ச்சியால் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும், இந்த மூன்று ராசிகளுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

3 /7

மகர ராசிக்கு ராஜயோகம் இருக்கிறது. சனிபகவன் மகர ராசியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். சனி பகவால் அவதிப்பட்டு இருந்த இந்த ராசிக்கு தற்போது நல்ல காலம் பிறக்கப்போகிறது. அதாவது, சனி பெயர்ச்சசியால் மகர ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்னைகள் சரியாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் தங்கலாம். மேலும், குடும்ப உறவுகளும் வலுவாக இருக்கும். கணவர் மனைவி இடையே நீண்ட காலமாக இருந்த பிரச்னைகளும் முடிவுக்கு வரும். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.

4 /7

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவன் 11ஆம் வீட்டில் இருக்கிறார். இதனால், குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதி சிக்கல்கள் தீரும். குழந்தைகள் வரத்திற்காக காத்திருப்பவர்களுக்க நல்ல செய்தி வரக் கூடும். அதோடு, வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்புகள் வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை கிடைக்கும். வேலையில் உயர்வு கிடைக்கும்.

5 /7

கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகளை சனிபகவன் திறக்கப்போகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டமி சனியால் பல பாதிப்புகளை இவர்கள் சந்தித்து இருக்கலாம். ஆனால், இப்போது அதுயெல்லாம் தலைகீழாக மாறும். அதாவது, சனி பெயர்ச்சியால் கடக ராசிகாரர்களுக்கு நீண்ட நாட்கள் நிலுவையில் இருக்கும் தொகை கிடைக்கும். வணிக ரீதியாக முன்னேற்றம் ஏற்படலாம். திருமணம் தடைகள் நீங்கி, திருமணம் கைகூட வாய்ப்புள்ளது. 

6 /7

சொத்து வாங்குவது, புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. புதிய வேலைகளும் கிடைக்கலாம். வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் இருந்து வந்த சொத்து பிரச்னைகள் தீரும் காலம் வரப்போகிறது. நான்கு மாதங்களாக நிலுவையில் இருந்து விஷயம் திடீரென்று மாறும. சனி உங்கள் செயலுக்கு ஆதரவாக இருப்பதால், உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கிறது. பணப் பிரச்னைகளும் நீங்கும்.

7 /7

மிதுன ராசியில் சனி பகவர் 10வது வீட்டில் நேரடியாக சஞ்சரித்து இருப்பார். வக்கிர காலத்தில் இருந்த அனைத்து பிரச்னைகளும் தீரும். சனி பெயர்ச்சியால், வேலையில் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கூட கிடைக்கலாம். நீண்ட கால திட்டங்களை முடிக்க வேண்டிய நேரம் இது. 2025ஆம் ஆண்டு தடைபட்டவை 2026ஆம் ஆண்டு நிறைவேறும். கடன் பிரச்னையில் இருந்து வெளியே வரலாம். கடின உழைப்பு முழு பலன் கிடைக்கும். சனி பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் தான். (இந்த கட்டுறை ஆன்மீக அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. இதற்கு எந்தஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. அதனால், இதற்கு ஜீ தமிழ் பொறுப்பேற்காது)