Sanju Samson: வரும் டிசம்பர் மாதம் 13 - 15 தேதிகளில் ஐபிஎல் தொடரின் மினி ஏலம் நடைபெற இருக்கிறது.
இந்த மினி ஏலத்தில் பெரிதாக பார்க்கப்படுவது ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தான். அவர் அந்த அணியிலேயே இருப்பாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் அவரை எப்படியாவது தங்களது அணியில் எடுத்துவிட வேண்டும் என சிலர் திட்டமிட்டு போட்டி போட இருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது மற்றொரு அணியும் சஞ்சு சாம்சனை கேட்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.
கடந்த ஐபிஎல் தொடரின் இறுதியில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நடப்பவை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சன் விலகுகிறார் என்ற செய்தி ஏற்றுக்கொள்ள முடியாததாக அமைந்தது.
இந்த செய்தியை தொடர்ந்து சிஎஸ்கே, கேகேஆர் போன்ற அணிகள் அவரை விலை பேசி வருகிறது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தேவை மிகப்பெரியதக இருப்பதால், பேச்சுவார்த்தை நீட்டித்துக்கொண்டே செல்கிறது.
குறிப்பாக சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனுக்காக பேசியபோது, கெய்க்வாட், துபே, ஜடேஜா போன்றோரை அவர்கள் கேட்டனர். இதனால் சிஎஸ்கே அணி பின் வாங்கியது.
இந்த நிலையில், டெல்லி அணி சஞ்சு சாம்சனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணி அவரை வாங்கி கேப்டனாக்க யோசித்து வருவதாக தெரிகிறது.
கடந்த முறை கே.எல். ராகுல் கேப்டன்சி பொறுப்பை நிராகரித்தார். இதனால் அக்சர் படேலை கேப்டனாக நியமித்தனர். தற்போது பெரிய வீரராக பார்க்கப்படும் சஞ்சு சாம்சனை கேப்டனாக ஆர்வம் காட்டி வருகிறது.
இதனால் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் கோடிக்கணக்கில் செலவிட தயாராக இருக்கிறது.