சனி பெயர்ச்சி 2025: இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக, இம்மாத கடைசியில் சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. சனிப்பெயர்ச்சிக்கும் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏழை நாட்டுச் சனிக்கும் நேரடி தொடர்பு உள்ளது.
ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சனிப்பெயர்ச்சி, அனைத்து ராசிகளுக்கும், வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை கொண்டு வரும் ஆற்றல் கொண்டது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சியினால், எழரை நாட்டு சனியால் குறிப்பாக ஜென்ம சனியால் பாதிக்கப்பட போகும் ராசியையும், அவர்களுக்கான பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
சனி பகவான்: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், ஒருவரின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை கொடுக்கிறார். இந்நிலையில், மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று நடைபெற உள்ள சனி பெயர்ச்சியில் ஜென்ம சனியால் பாதிக்கப்பட போகும் ராசி அறிந்து கொள்ளலாம்.
ஏழரை நாட்டு சனி: நீதி கடவுளான சனீஸ்வரன், எந்த ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் என்பதை பொறுத்து, ஏழரை சனிக்காலம் தொடங்குகிறது. மொத்தம் ஏழரை ஆண்டுகள் கொண்ட இந்த காலத்தில், முதல் இரண்டரை ஆண்டு காலம் விரய சனியாகவும், அடுத்த இரண்டரை காலம் ஜென்ம சனி ஆகவும், அடுத்த இரண்டரை காலம் பாத சனியாகவும் இருக்கும்.
ஜென்ம சனி: சனிபகவான் வரும் மார்ச் மாத இறுதியில், கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் நிலையில், மீன ராசிக்கு ஜென்ம சனி காலம் தொடங்கும். விரைய சனி பாத சனி காலத்தை விட, ஜென்ம சனி காலத்தில், வாழ்க்கையில் சிக்கல்களும் பிரச்சனைகளும் அதிகம் இருக்கலாம்.
மீன ராசி: சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ள நிலையில், இதுவரை ஜென்ம சனியால் பாதிக்கப்பட்டு வந்த கும்ப ராசிக்கு, பாத சனி காலம் தொடங்கி, பாதிப்புகள் குறையும் நிலையில், மீன ராசிக்கு சனி பகவான் செல்வதால், மீனத்திற்கு விரய சனிக்காலம் முடிந்து, ஜென்ம சனி காலம் தொடங்குகிறது.
ஜென்ம சனி காலத்தில், பிரச்சனைக்கு மேல் பிரச்சனை சந்திக்க நேரிடலாம். ஒரு பிரச்சனை முடிந்தால் அடுத்த பிரச்சனை என, மன உறுதியை சீர்குலைக்கும் வகையில், பாடாய்படுத்தி எடுப்பார் சனிபகவான். சில சமயங்களில், வாழ்க்கையில் எல்லைக்கே சென்று விடுவார்கள். அந்த அளவிற்கு, பண கஷ்டம், மனக்கஷ்டம், உடல் உபாதை என எல்லா வகையிலும் வாழ்க்கையை புரட்டிப் போடும்.
சனீஸ்வரனை போல் கெடுப்பாறும் இல்லை; சனீஸ்வரனை போல் கொடுப்பாரும் இல்லை என்று பழமொழி உள்ளதற்கு ஏற்ப, சோதித்தாலும், அவர் அள்ளிக் கொடுப்பார் என்பதை மனதில் கொண்டு, இந்த காலகட்டத்தை மன உறுதியுடன் கடந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை காத்திருக்கிறது.
சனி பரிகாரங்கள்: கஷ்டப்படுபவர்களுக்கு, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதால், சனி பகவானின் தீய பார்வையில் இருந்து தப்பிக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பதை போன்ற சிறந்த பரிகாரம் உலகில் இருக்க முடியாது. கண்ணுக்குத் தெரியாத எறும்புகளுக்கு உணவளிப்பது மிகவும் சிறந்தது. இதனால் சனிபகவான் மனமகிழ்ந்து, மலைபோன்ற பிரச்சனை பனி போல் நீங்கிவிடும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.