சனி பெயர்ச்சி இருக்கா இல்லையா.... திருக்கணித பஞ்சாங்கம் கூறுவது என்ன... ஜோதிடர்கள் அளித்த முக்கிய தகவல்

சனிப்பெயர்ச்சி 2025: வரும் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி நடைபெறும் என ஜோதிடர்கள் பலர் கூறி வந்த நிலையில், நேற்று திருநள்ளாறு சனி பகவான் கோவில் நிர்வாகம், சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு இல்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கடந்த சில நாட்களாகவே, சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு நடைபெறுமா நடைபெறாதா என்பது பற்றிய அவ்வப்போது எழுந்து வந்த நிலையில், திருநள்ளாறு கோவில் அறிக்கை, சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

1 /9

ஜோதிடத்தில் மிக முக்கியமாக கருதப்படும் சனி பெயர்ச்சி, அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அனைவரும் இதற்கான பலன்களையும் பரிகாரங்களையும் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கின்றனர்.

2 /9

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், வரும் 29ஆம் தேதி பெயர்ச்சி ஆவதாக திருக்கணித பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், திருநள்ளாறு கோவில் அறிக்கை இந்த ஆண்டு இல்லை என கூறுகிறது

3 /9

ஜோதிட சாஸ்திரங்கள் மற்றும் கணக்குகள் மற்றும் கணக்கீடுகள் என்பது இரண்டு வகை பஞ்சாங்கங்களின்படி பார்க்கப்படுவதாக பிரபல ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்று திருக்கணித பஞ்சாங்கம். மற்றொன்று வாக்கிய பஞ்சாங்கம்.

4 /9

முதன் முதலாக வாக்கிய பஞ்சாங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதில் சில விஷயங்கள் வித்தியாசப்பட்டதால், அதை திருத்தி அமைத்து உருவாக்கப்பட்ட பஞ்சாங்கம் தான் திருக்கணித பஞ்சாங்கம்.

5 /9

திருத்தி அமைக்கப்பட்ட பஞ்சாங்கத்தை, அதாவது திருக்கணித பஞ்சாங்கத்தை, பல ஜோதிடர்கள் ஏற்றுக்கொண்டனர். பெரும்பாலான ஜோதிடர்கள், இந்த பஞ்சாங்கத்தை தான் அதிக அளவில் கடைபிடிக்கின்றனர்.

6 /9

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், வாக்கிய பஞ்சாங்கம் கடைபிடிக்கப்படுவதால், அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள கால நேரத்தை தான் பின்பற்றுகின்றனர். இதனால் சனி பெயர்ச்சி பூஜைகள் எதுவும் இல்லை என கூறுகின்றனர்

7 /9

திருநள்ளாறில், வாக்கிய பஞ்சாங்கப்படி அடுத்த ஆண்டு தான் சனி பெயர்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் மற்ற கோவில்களில், திருக்கணித பஞ்சாங்க முறைப்படி, சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் நடத்தப்படும்.

8 /9

சனிப்பெயர்ச்சி பலன்கள், ஜோதிடருடைய அனுபவம், அவரது ஆராய்ச்சி, அவர் பயன்படுத்தும் முறை ஆகியவற்றின்படி இருக்கும். பிரபல ஜோதிடர்கள் பலர் இரண்டு பஞ்சாங்கத்தையும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர், திருக்கணிதத்தை பயன்படுத்துகின்றனர். இதில் குழப்பிக் கொள்ள எதுவும் இல்லை என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.