வெள்ளி பாதத்தில் நுழையும் சனி பகவான்... இந்த 3 ராசிகளின் எல்லா பிரச்னையும் தீரும்!

Shani Peyarchi: சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைவதால் இந்த 3 ராசிகளின் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்து, அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.  

Saturn Transit In Pisces: சனி பகவான் வரும் மார்ச் 29ஆம் தேதி மீனத்தில் பெயர்ச்சி அடைகிறார். மேலும், சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைகிறார். இதனால், இந்த 3 ராசிகளுக்கு சுபமான பலன்கள் உண்டாகும்.

1 /8

கிரகங்கள் பெயர்ச்சி அடைவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது நேர்மறையான தாக்கம் மட்டுமின்றி எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும்.    

2 /8

சனி பகவான் (Lord Saturn) வரும் மார்ச் 29ஆம் தேதி ராசி மாற்றம் அடைகிறது. கும்பத்தில் இருக்கும் சனி பகவான் தற்போது மீனத்தில் (Pisces) பெயர்ச்சி ஆக இருக்கிறது.  

3 /8

சனி பகவான் பெயர்ச்சி (Saturn Transit) அடைவது நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழையப்போகிறார்.   

4 /8

சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைவதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் அதிகரிக்கப்போகிறது. பணம், வேலை சார்ந்த பலன்கள் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.   

5 /8

ரிஷபம் (Taurus): சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படுகிறது. உங்களுக்கு பணம் வந்துகொண்டே இருக்கும். நீண்ட நாள்களாக வராமல் இருந்த பணம் உங்களை தேடி வரும், இதனால் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். முதலீட்டில் இருந்து நல்ல பலன் கிடைக்கும். உடல் சார்ந்த பிரச்னைகள் தீரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும், மன பிரச்னைகளும் முடிவுக்கு வரும்.   

6 /8

கன்னி (Virgo): சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைவதால் கன்னி ராசிகளுக்கு நேர்மறையான பலன்கள் அதிகம் கிடைக்கும். பணம் உங்களை தேடி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஊதியம் அதிகரிக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். குழந்தைகள் சார்ந்து நல்ல செய்திகள் வரலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.   

7 /8

மகரம் (Capricon): சனி பகவான் வெள்ளி பாதத்தில் நுழைவதால் மகர ராசிக்காரர்களுக்கும் நல்லதே நடக்கும். இந்த சனி பெயர்ச்சியின் மூலம் இந்த ராசிக்கான ஏழரை நாட்டு சனி முடிவுக்கு வரும். சனியால் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். முதலீட்டில் இருந்து நல்ல வருமானம் வரும். பொருளாதாரம் உயரும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.