2026 புத்தாண்டு ராசிபலன்: சனி நட்சத்திர பெயர்ச்சி...3 ராசிகளுக்கு 2026 ஆரம்பமே அதிரடி

Published: Nov 07, 2025, 03:56 PM IST|Updated: Nov 07, 2025, 03:56 PM IST

Sani Nakshatra Peyarchi: 2026 புத்தாண்டு தொடக்கத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். இதனால் 3 ராசிகளுக்கு பொற்காலம் பிறக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Saturn Transit: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். அவரது சிறிய அசைவும் அனைத்து ராசிகளிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2026 ஜனவரியில் நடக்கவுள்ள சனி நட்சத்திர பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Sani Peyarchi1/10

சனி பெயர்ச்சி

அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். அவர் ஒரே ராசியில் அதிக காலம் இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும்.

Sani Nakshatra Peyarchi2/10

சனி நட்சத்திர பெயர்ச்சி

ஜனவரி 2026 இல் சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்தில் நுழைவார். இது 2026 ஆம் ஆண்டின் குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Sani Peyarchi Palangal3/10

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்களது வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்வில் பல வெற்றிகள் குவியும்.

Taurus4/10

ரிஷபம்

ரிஷபம்: சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்தின் இரண்டாம் பாதத்தில் பெயர்ச்சி ஆவது ரிஷப ராசிக்கு பெரும் நன்மைகளைத் தரும். பழைய ஆசைகள் நிறைவேறக்கூடும். வேலையில் உள்ள தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும். வருமானம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். குடும்பத்துடன் மறக்கமுடியாத தருணங்களை செலவிடுவீர்கள். வேலை தேடிக்கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தேர்வுகள்-நேர்காணல்களுக்குத் தயாராபவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

Gemini5/10

மிதுனம்

மிதுனம்: புத்தாண்டில் சனி நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்கு பெரிதும் உதவும். ஊழியர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானமும் அதிகரிக்கும். சில முக்கியமான வேலைகளில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள், அது பலனைத் தரும். நிதி நிலைமை வலுப்பெறக்கூடும். மூத்த அதிகாரிகளுடன் நல்ல உறவுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.

 

Pisces6/10

மீனம்

மீனம்: மீன ராசியில்தான் இப்போது சனி பகவான் இருக்கிறார். 2026 ஆம் ஆண்டிலும் அவர் அதே ராசியில் இருப்பார். இந்த நேரத்தில், சனி தனது சொந்த ராசியான உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்தில் பெயர்ச்சி ஆகிறார். இது மீன ராசிக்கு சாதகமாக இருக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். வாழ்க்கையில் சவால்கள் இருக்கும், ஆனால் நீங்கள் அவற்றை சமாளிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

Shani Gochar7/10

சனி பகவான்

சனி பகவானின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்களால் ஏற்படும் ஜோதிட ரீதியான மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலங்களை கண்டு மக்கள் அச்சம் கொள்வதுண்டு. ஆனால், நேர்மையான வழியில், முழுமையான முயற்சியை முதலீடு செய்து, பிறருக்கு உதவி, நேர்த்தியான வாழ்வை வாழ்ந்தால், சனி பகவான் மகிழ்ந்து அருள் புரிவார்.

Lord Shani8/10

சனி பகவானின் அருள் பெற

சனி பகவானின் அருள் பெற, தினமும் 'நீலாஞ்சன சமாபாசம், "ரவிபுத்ரம் யமாக்ராஜம்; சாயா மார்தாண்ட சம்பூதம், தம நமாமி சனீச்சரம்' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம். மேலும், ஹனுமான் சாலீசா, சனி சாலிசா, கோளறு பதிகம் அகியவற்றை கூறுவதும் நன்மை பயக்கும்.

Ezharai Sani9/10

ஏழரை சனி

ஏழரை சனி தாக்கங்களை குறைத்து, சனி பலவானின் ஆசிகளை பெற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வழிபடுவது நல்லது.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.