சனிப் பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டம் நல்ல பொற்காலம் இந்த ராசிகளுக்கு

ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு தனி சிறப்பு இடம் உண்டு. இதில் சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கிய நிகழ்வாகும். ஏனெனில் சனியின் ராசி மாற்றம் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.

வருகிற மார்ச் 29, 2025 அன்று, சனி பகவான் கும்ப ராசியிலிருந்து இடப் பெயர்ச்சி அடைந்து மீன ராசிக்கு நகரப் போகிறார். சனியின் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும். இந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், அந்தஸ்த்து, பதவி உயர்வு, வேலை வாய்ப்பு போன்றவை நிச்சயம் கிடைக்கும்.

1 /7

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வருகிற 29ஆம் தேதி இரவு 10:07 மணிக்கு சனி பெயர்ச்சி ஆகும். அந்நாளில் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா நடைபெறப் போகிறது. இந்த சனிப்பெயர்ச்சி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு சனி நகரப் போகிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கூடும் என்று பார்ப்போம்.

2 /7

மிதுனம்: சனி பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். பெரிய அளவில் வெற்றி பெறலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வேலையில் விரும்பிய மாற்றத்தை பெறலாம். பொருள் வசதி உண்டாகும். சமூகத்தில் புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். 

3 /7

சிம்மம்: சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கும் நன்மை பலனைத் தரும். தொழிலைப் பொறுத்த வரை லாபம் பெருகி நிதி நிலை மேம்படும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும்.

4 /7

கன்னி: சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்தை தரும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். செல்வம் பெருகி நிதி சிக்கலில் இருந்து மோட்சம் கிடைக்கும். பேச்சில் மென்மை இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கும். 

5 /7

விருச்சிகம்: சனி பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். நிதி சிக்கலில் இருந்து முழுமையாக விடுப்படுவீர்கள். புதிய வழியில் இருந்து வருமானம் அதிகரிக்கும், இதனால் நிதி ஆதாயம் ஏற்படும். தொழிலைப் பொறுத்த லாபம் பெருகி நல்ல செய்திகளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உயரும்.

6 /7

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.