ஜோதிடர்களின் படி, சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், எந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
ஜோதிடத்தில் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி கிரகம் தனது ராசியை மாற்றும் மாற்றப்போகிறார், இதன் செயல் மார்ச் 29, 2025 அன்று மீன ராசியில் நிகழும். அத்தகைய சூழ்நிலையில், இது 12 ராசிகளையும் பாதிக்கும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு, சனியின் பெயர்ச்சி பாதகமான பலன்களைத் தரும். செலவுகள் வருமானம் அதிகரிக்கும். சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். மத நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மதப் பயணம் செல்லலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு, லாபம் பெருகும். ரிஷப ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் உண்டாகும். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். லாட்டரியில் லாபம் பெருகும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சிக்கு பிறகு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான பலன் கிடைக்கும். வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம். சொத்துக்களை வாங்கலாம். கணவரின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.
கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் லாபம் உண்டாகும். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலை கிடைக்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் உடல் வலியை தருவார். கோபம் அதிகரிக்கக்கூடும். கடன் அதிகரிக்கக்கூடும். நிதி நிலை மோசமடையலாம். பணியிடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு, சனியின் பெயர்ச்சியால் திருமணம் நடைபெறலாம். புதிய இடத்தில் வேலை கிடைக்கலாம். மனக் கவலை ஏற்படலாம். மதப் பயணங்கள் செல்லல்லாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு, கடன் தொல்லை நீங்கும். இந்தப் பெயர்ச்சி சில மன உளைச்சல்களை ஏற்படுத்தக்கூடும். வெளிநாட்டில் வியாபாரம் பலன் தரும். தொழில்நுட்பத் துறையில் பயனடைவீர்கள்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். . சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். திருமணம் நிச்சயிக்கப்படும். வீட்டில் குழந்தை பிறக்கும. மத ஸ்தலங்களுக்கு செல்லலாம். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு, மன மகிழ்ச்சி உண்டாகும். இந்தப் பெயர்ச்சியால் சொத்து நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படலாம். மன உளைச்சலை அனுபவிக்க நேரிடும்.
மகர ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் மிகச் சிறந்த பலன்களைத் தருவார். சுப நிகழ்வுகள் நடைபெரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நல்ல வெற்றி உண்டாகும். தொழிலைத் தொடங்கலாம். தொழிலில் வெற்றி பெறலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு, பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். அதிகப்படியான செலவினங்களை தவிர்க்க வேண்டும். புதிய சொத்து வாங்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் பயனடையலாம். தொழில் வளரும்.
மீன ராசிக்காரர்களுக்கு, சனியின் பெயர்ச்சி புகழைத் தரும். சில சவால்கள் சந்திக்க நேரிடும். பயணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தடை ஏற்படும். வேலையில் சிறிது தாமதம் ஏற்படலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.