சூரியனில் சனி பெயர்ச்சி 2025.. நல்ல காலம் ராஜ பொற்காலம் இந்த ராசிகளுக்கு

Surya Grahanam Sani Peyarchi: வருகிற மார்ச் 29 அன்று சூரிய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சி மீன ராசியில் நிகழப்போகிறது. மீன ராசியில் சனிப் பெயர்ச்சி சுமார் இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும், அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். 

  • Mar 26, 2025, 10:37 AM IST

Solar Eclipse Prediction For 12 Zodiac Signs: ஜோதிடத்தின்படி, வரும் மார்ச் 29, 2025 அன்று ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கப் போகிறது. இந்த நாளில் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் அரங்கேறும். ஜோதிட ரீதியாக சூரிய கிரகணம் மிகவும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் 29 மார்ச் பிற்பகல் 2:20 மணிக்கு தொடங்கி மாலை 6:16 மணி வரை நீடிக்கும். மேலும் இந்த நாளில், சனி சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தனது ராசியை மாற்றப் போகிறார். ஜோதிடத்தில் இது மிகவும் முக்கிய தினமாகும். ஏனென்றால் சூரிய கிரகணம் மற்றும் சனியின் பெயர்ச்சி ஒரே நாளில் நடக்கப் போவதால் இது சில ராசிக்காரர்களுக்கு நன்மை தரும், எனினும் சில ராசிக்காரர்களுக்கு சவாலாக இருக்கும்.

1 /14

வருகிற மார்ச் 29 அன்று சூரிய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சி மீன ராசியில் நிகழப்போகிறது. மீன ராசியில் சனிப் பெயர்ச்சி சுமார் இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும், அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். 

2 /14

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு, சூரிய கிரகணம் மற்றும் சனிப் பெயர்ச்சி சவால்களை தரும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். சுயபரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

3 /14

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் பொறுப்புகளை அதிகரிக்கும். சில குடும்ப பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பொருளாதார ரீதியாக இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

4 /14

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, சூரிய கிரகணத்தின் தாக்கமும், சனிப் பெயர்ச்சியும் சாதகமான பலனைத் தரும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கைக்கூடி வரும். உடல்நலம் பாதிக்கப் படலாம். 

5 /14

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, சூரிய கிரகணம் சனிப் பெயர்ச்சி ஆரோக்கியத்தில் தெளிவைத் தரும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

6 /14

சிம்மம்: சிம்ம ராசிக்கு சூரிய கிரகணம் சனி பெயர்ச்சி புதிய பணி பொறுப்புகளை தாராளம். தன்னம்பிக்கை குறையலாம். கடின உழைப்பு தேவைப்படும். அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும்.

7 /14

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு, சூரிய கிரகணம், சனி பெயர்ச்சி சமநிலையற்றதாக இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

8 /14

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். நிதி நிலை சாதகமாக இருக்கும், குடும்பப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும், அவற்றை பொறுமையுடன் கையாளவும்.

9 /14

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு, சூரிய கிரகணம் மற்றும் சனியின் பெயர்ச்சியால் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளை பெறலாம். சில மன அழுத்தமும் ஏற்படும். பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

10 /14

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்த காலமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்காலத் திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.

11 /14

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு, சூரிய கிரகணம் மற்றும் சனியின் பெயர்ச்சியால் தொழில் அமோகமாக நடக்கும். தன்னம்பிக்கை ஊக்குவிக்கும்.

12 /14

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சியால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் வெற்றி மழை வீசும்.

13 /14

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமும் சனிப் பெயர்ச்சியும் மிகவும் சுப பலனைத் தரும். பெரிய மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் மன அமைதி கிடைக்கும்.

14 /14

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.