Sani Nakshatra Peyarchi: அக்டோபர் மாத தொடக்கத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இது 4 ராசிகளுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் மிக முக்கியமான ஒரு கிரகமாக உள்ளார். அவரது ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது. அக்டோபர் தொடக்கத்தில் நடக்கவுள்ள சனி நட்சத்திர பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.
1/10ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் ஒரு முக்கியமான கிரகமாக உள்ளார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிப்பதால், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பெயர்ச்சி மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கபடுகின்றது.
2/10தீபாவளிக்கு முன்னதாக, அக்டோபர் 3 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பகவான் இந்த நட்சத்தின் அதிபதியாக கருதப்படுகிறார். ஆகையால் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
3/10சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், எனினும், சில ராசிகளுக்கு இது அதிகப்படியான நன்மைகளை அள்ளித்தரும். சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஜாக்பாட் நன்மைகளை அடையவுள்ள அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
4/10மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி அதிக நன்மை பயக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நிதி பக்கம் வலுவாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வேலைத் துறையிலும் வெற்றி கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சுப நிக்ழ்ச்சிகள் நடக்கும்.
5/10மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். எதிரிகளை வெல்வீர்கள். இந்த நேரம் மாணவர்களுக்கும் நல்லதாக இருக்கும்.
6/10கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தை அளிக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். நீண்ட பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆன்மீகப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
7/10மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சி அற்புதமான பலன்களை அள்ளித்தரும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
8/10சனி பகவானின் அருள் பெற, தினமும் ‘ஓம் காகத்வஜாய வித்மஹே, கட்க அஸ்தாய தீமஹி, தன்னோ மந்த ப்ரசோதயாத்’ என்ற சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது நல்லது.
9/10சனி பெயர்ச்சி, ஏழரை சனி தாக்கங்கள் குறைந்து நல்ல பலன்கள் கிடைத்து, கர்ம வினைகள் தீர, திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசனம் செய்து வழிபடுவது நல்லது. இது தவிர அவ்வப்போது ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்ய வேண்டும்.
10/10பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.