நியூரான்களை சேதப்படுத்தி... மூளையின் ஆற்றலை காலி செய்யும்... சில ஆபத்தான உணவுகள்

நாம் உண்ணும் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, மூளை ஆரோக்கியத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள டயட்டில் கவனம் செலுத்துவது அவசியம்.

ஆரோக்கியமற்ற சில உணவுகள், உடலை மட்டுமல்ல மூளையின் செயல் திறனையும் பாதிக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நினைவாற்றலை பலவீனப்படுத்தும் உணவுகளைப் பற்றி அறிந்து கொண்டால், அதனை தவிர்த்து மூளையின் ஆற்றலை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். மூளையின் செயல் திறனை பாதிக்கும் ஆபத்தான சில உணவுகள் பற்றி இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1 /8

மூளை ஆரோக்கியம்: சில உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மட்டும் பாதிப்பதில்லை. அவை நியூரான்களை சேதப்படுத்தி, மூளையின் செயல் திறனை பாதிக்கிறது. மறதி நோய், மனச்சோர்வு போன்ற கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும். மூளைக்கு விஷமாக கருதப்படும் ஐந்து உணவுகள் பற்றி, இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

2 /8

வெள்ளை சர்க்கரை மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி நினைவாற்றலை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிக சர்க்கரை சேர்த்த ஐஸ்கிரீம்கள், கேக் வகைகள், குக்கீஸ் இனிப்புகள் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பதால், மூளைத்திறனை பாதுகாக்கலாம்.

3 /8

வாய்க்கு மிக ருசியாக இருக்கும், எண்ணெயில் பொரித்த உணவுகள் மூளை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். சிப்ஸ், பிரெஞ்சு ப்ரைஸ், பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள் மூளையின் செல்களை சேதப்படுத்துகின்றன.

4 /8

கோடை காலத்தில் நாம் அதிகம் அருந்தும் பாக்கெட் செய்யப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளில் உள்ள பிரக்டோஸ், டோப்போமைண் ஹார்மோன் அளவை பாதித்து, மூளைக்கு அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது. இதனால் மூளையின் செயல் திறனும் ஆரோக்கியமும் பெரிதளவு பாதிக்கப்படும்

5 /8

உங்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்று விரும்பினால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும். நீண்ட நாள் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மூளையை காலி செய்யும் ஆற்றல் கொண்டவை.

6 /8

மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா, பீட்சா பர்கர், பாஸ்தா உள்ளிட்டவை மூளை ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை. இதில் இருப்பதெல்லாம் கலோரிகள் மட்டுமே. ஊட்டச்சத்து மருந்துக்கும் இல்லை. இதனை மாதங்களுக்கு இரு முறை என்ற அளவில் சாப்பிட்டால் பாதிப்பு ஏதும் இருக்காது. ஆனால் இதை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டால், மூளை மங்கிப் போகும்.

7 /8

ஆரோக்கியமற்ற உணவுகள் மட்டும் அல்லாது, தூக்கமின்மையும் மூளையின் செயல்திறனை பெரிதும் பாதிக்கும். ஏனெனில் நல்ல தூக்கம், மூலை தன்னைத்தானே டீடாக்ஸ் செய்து கொண்டு ரீசார்ஜ் ஆக உதவுகிறது. தூக்கமின்மையால், ஞாபக மறதி கற்றல் திறன் ஆகியவையும் பாதிக்கும்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.