Scholarship : 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை - பெறுவது எப்படி?

Tamil Nadu Scholarship : தமிழ்நாடு அரசு மூன்றாம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முழு விவரம்

Tamil Nadu Government Scholarship : தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் 3 ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /7

தமிழ்நாடு அரசு கல்விக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டு கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

2 /7

அந்தவகையில் மூன்றாம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அறிவிப்பு வெளியிட்டு, மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். 

3 /7

இப்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் 3 ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

4 /7

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம். 

5 /7

பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-ற்குள் இருக்ககும் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) இன மாணவிகளுக்கான பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2024-25 ஆம் கல்வியாண்டின் கீழ் உதவித் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 

6 /7

மாவட்டத்தில் இருக்கும் 985 கிராமப்புற மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து 7964 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிடும் பொருட்டு கேட்பு பட்டியல்கள் தொடர்புடைய மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் பெறப்பட்டது.   

7 /7

அம்மாணவிகளுக்கான கல்வி ஊக்கத்தொகை கூடுதல் ரூ.49,03,000/- னை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அத்தொகை தலைமையாசிரியர்கள் மூலம் தொடர்புடைய மாணவியர் பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.