ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி அறிவிப்பு.. குஷியில் மாணவர்கள்!

Written ByUmabarkavi K
Published: Jun 03, 2026, 09:16 AM IST|Updated: Jun 03, 2026, 09:16 AM IST

June Month School Holiday Latest: கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜூன் 30ஆம் தேதி வரை  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 30ஆம் தேதி விடுமுறை அளித்து பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

1/5

இந்தியாவில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக இருந்து வருகிறது.  மே மாதம் முடிந்துவிட்டாலும், கோடை வெயிலின் தாக்கம் மட்டும் குறையவில்லை. குறிப்பாக வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. குறிப்பாக, பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.

 

2/5

அதுவும் தற்போது பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்பட இருந்தது. வெயிலின் தாக்கத்தால் பஞ்சாப் மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

 

3/5

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் ஜூன 30ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மட்டுமில்லாமல், வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

 

4/5

அதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரியானா,  உத்தர பிரதேச மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   பீகார், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஜூன் 20ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தெலங்கானா, ஆந்திர பிரதேசத்தில் ஜூன் 11ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

5/5

நம் தமிழகத்தை பொறுத்தவரை, ஏப்ரல் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது. ஆனால், கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு ஜூன் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.  அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை (ஜூன் 4) திறக்கப்பட இருக்கிறது.