Sevvai Peyarchi Palangal: கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் யாருக்கு அதிக நன்மை? செவ்வாய் பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
Mangal Gochar: தற்போது செவ்வாய் மிதுன ராசியில் இருக்கிறார். ஏப்ரல் 3, 2025 அன்று வியாழக்கிழமை அதிகாலை 1:56 மணிக்கு, செவ்வாய் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். இதனால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறார். செவ்வாய் அக்னியுடன் தொடர்புடையவர். செவ்வாய் பூமியின் மகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
வீடு, நிலம், வீரம், செல்வம், தைரியம், படை ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக உள்ள செவ்வாய் கிரகம் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். செவ்வாய் பெயர்ச்சி ஒரு முக்கிய ஜோதிட நிகழ்வாக பாக்கப்படுகின்றது.
தற்போது செவ்வாய் மிதுன ராசியில் இருக்கிறார். ஏப்ரல் 3, 2025 அன்று வியாழக்கிழமை அதிகாலை 1:56 மணிக்கு, செவ்வாய் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆவார்.
செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்கள் அதிகப்படியான நற்பலன்களை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த காரணத்திற்காக, செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதனுடன், சொத்து தொடர்பான நன்மைகளும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டு வசதிகள் அதிகரிக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் பெயர்ச்சி 12வது வீட்டைப் பாதிக்கும். இது வெளிநாட்டுப் பயணம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் குடியேற விரும்புவோருக்கு இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று நிதி ஆதாயம் கிடைக்கக்கூடும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
மீனம்: செவ்வாய் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களின் ஐந்தாம் வீட்டில் நடைபெறும். இந்தக் காரணத்தினால், மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்ம். அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கான முழு வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.
செவ்வாயின் அருள் பெற ‘ஓம் வீரத்வஜாய வித்மஹே, விக்ன ஹஸ்தாய தீமஹி, தந்நோ பெளமஹ ப்ரசோதயாத்’ என்ற அங்காரக காயத்ரியை சொல்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.