Mars Transit: செவ்வாய் கிரகம் வரும் ஏப். 3ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், இந்த 4 ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது.
Mars Transit In Cancer: செவ்வாய் கிரகம் கடக ராசியில் இருந்து ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை இருக்கும். இந்த 2 மாதங்களில் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறும்.
செவ்வாய் கிரகம் தான் ஒருவருக்கு தைரியத்தையும், துணிச்சலையும் வழங்குகிறது. அந்த வகையில், செவ்வாய் கிரகம் குறிப்பிட்ட காலத்தில் வெவ்வேறு ராசிகளுக்கு பெயர்ச்சி ஆகும். இதனால், 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும்.
அந்த வகையில், செவ்வாய் கிரகம் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு ஏப்ரல் 3ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். வரும் ஜூன் 7ஆம் தேதி வரை கடக ராசியில் இருப்பார்.
கடக ராசியில் செவ்வாய் கிரகம் இருக்கும் இந்த 2 மாதங்களில் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறும். எக்கச்சக்க சந்தோஷத்தையும், செழிப்பையும் மட்டுமின்றி சமூகத்தில் மரியாதையும் உயரும் எனலாம்.
கடகம்: செவ்வாய் பகவானின் அருளால் உங்களின் முன்னேற்றத்திற்கு இருக்கும் தடைகள் ஒவ்வொன்றாக நீங்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தையின் கல்வியில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். பல ஆண்டுகளுக்கு பிறகு பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். சுய தொழிலை தொடங்குபவர்களுக்கு வெற்றி நிச்சயம்
சிம்மம்: தேவையற்ற வேலையை நீங்கள் கைவிட்டுவிடுவீர்கள். வேலையை மாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இதனால், உங்களின் பணி வாழ்வு முன்னேற்றம் காணும். குடும்பத்தினருடன் மே மாதத்தில் நீங்கள் ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.
கன்னி: எந்த துறையில் இருந்தாலும் உங்களுக்கு தற்போது வெற்றியே கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பெரிய ஆப்பர்கள் வரும், இதனால் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் பகவானின் அருள் பணியாளர்களுக்கு நிச்சயம் இருக்கும். இதனால், ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வரும்.
கும்பம்: இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நீண்ட நாளாக கிடப்பில் இருந்து பணிகள் தொடங்கும். ஆரோக்கியம் சிறப்பாகும். பழைய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு பல்வேறு வழிகளில் வருமானம் வரும். இதனால் பொருளாதாரம் பலப்படும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பும் உயர வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.