Panchgrahi Yog: மீன ராசியில் புதன், சுக்கிரன், குரு, ராகு, சனி பகவான் இணைவதால் அரிய பஞ்சகிரஹி யோகம் உருவாகிறது. இதனால் பயனடையப்போகும் 5 ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
வரும் மார்ச் 30ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதன்மூலம், பஞ்சகிரஹி யோகம் உருவாகும், இது அரிய யோகமாகும்.
இந்து பஞ்சாங்கத்தின்படி, சைத்ர நவராத்திரி (Chaitra Navratri) வரும் மார்ச் 30ஆம் தேதி முதல் தொடங்குகின்றனர். சைத்ர நவராத்திரிக்கு முன் சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் என்றும் கணிக்கப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு பின்னர் சனி பகவான் (Lord Saturn) மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த சூழலில் மீன ராசியில் (Pisces) சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகியோருடன் சனி பகவானும் இணைவதால் பஞ்சகிரஹி யோகம் (Panchgrahi Yog) உருவாகிறது. இந்த பஞ்சகிரஹி யோகத்தால் பயனடையப்போகும் 5 ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
ரிஷபம் (Taurus): சைத்ர நவராத்திரியை ஒட்டி, சனி பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு அருளை வழங்குவார் எனலாம். இதனால், நல்ல செய்திகள் தேடி வரும். புதிய வேலைகளை தொடங்கலாம். வேலையிலும் பதவி உயர்வு மற்றும் லாபம் கிடைக்கும். தொழிலிலும் பண வரவு அதிகமாகும். மற்ற இடங்களில் இருந்து பண வரவு கிடைக்கும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சாத்தியங்களும் உண்டு.
மிதுனம் (Gemini): சைத்ர நவராத்திரியை முன்னிட்டு மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை சனி பகவான் அளிப்பார். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கொட்டும். சனி பகவானின் அருளால் பொருளாதாரத்தில் எந்த குறையும் இருக்காது. நீண்ட நாள்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் உடனே நடக்கும். நிலம் சார்ந்து உங்களுக்கு பெரியளவில் பொருளாதார நன்மை கிடைக்கும்.
கன்னி (Virgo): சைத்ர நவராத்திரி முன் உருவாகும் இந்த அரிய பஞ்சகிரஹி யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. சுபமான இந் காலகட்டத்தில் வணிகத்தில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்பை விட பணப்புழக்கம் அதிகமாகும். முதலீட்டில் நல்ல வருமானம் வரும். குடும்பச் சொத்தில் இருந்தும் பலன் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம், ஊதிய உயர்வுக்கும் வாய்ப்புள்ளது. பயணம் செய்வதன் மூலமும் பொருளாதார நன்மை கிடைக்கும்.
தனுசு (Sagittarius): இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் புதிய வேலையை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். பொருளாதார பிரச்னையும் தீரும். செழிப்போடு வாழ்வதற்கான வாய்ப்புகள் திறக்கும். சனி பகவானின் அருளால் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழிலிலும் பணப் புழக்கம் அதிகமாகும். நிலம் வாங்க வாய்ப்புள்ளது.
கும்பம் (Aquarius): இந்த ராசிக்காரர்களுக்கும் இது நல்ல காலம் ஆகும். நீண்ட நாள்களாக வராமல் இருந்த பணம் உங்களை தேடி வரும். முதலீடும் நல்ல வருமானத்தை கொடுக்கும். வீடு கட்டி வருபவர்கள் விரைவில் கட்டுமான பணியை முடிக்கலாம். புதிய வீடுகளை கட்ட நினைப்பவர்களின் ஆசை நிறைவேறும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)