மீனத்தில் உதயமாகும் சனி பகவான்... இந்த 3 ராசிகளின் கனவுகள் மெய்ப்படும் - அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

Shani Uday In Pisces: சனி பகவான் மீன ராசியில் வரும் மார்ச் 31ஆம் தேதி உதயமாகும் நிலையில், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறக்கும் எனலாம்.

Saturn Rise: சனி பகவானின் நிலை மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சிலருக்கு எதிர்மறையான தாக்கமும், சிலருக்கு நேர்மறையான தாக்கும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 /8

சனி பகவான் (Lord Saturn) நீதியின் கடவுளாக அறியப்படுகிறார். அவர் நிலையை மாற்றினால் நிச்சயம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கம் ஏற்படும். அது எதிர்மறையான தாக்கமாகவும் இருக்கலாம், நேர்மறையான தாக்கமாகவும் இருக்கலாம். 

2 /8

இந்நிலையில், சனி பகவான் கும்ப ராசியில் (Aquarius) இருந்து வரும் மார்ச் 31ஆம் தேதி மதியம் 12:43 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சி அடைந்து உதயமாகிறார். 

3 /8

அந்த வகையில், சனி பகவான், குரு பகவானுக்கு (Jupiter) உகந்த ராசியான மீனத்தில் (Pisces) உதயமாவதால் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் சவால்களையும் சந்திப்பார்கள். 

4 /8

இந்நிலையில், மீனத்தில் சனி பகவான் உதயமாவதால் (Saturn Rise) இந்த 3 ராசிகள் பலனடையப் போகிறார்கள். அவர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.  

5 /8

மேஷம் (Aries): சனி பகவான் இந்த ராசியில் 12வது வீட்டில் உதயமாவார். இதனால் வாழ்வில் இருந்த அத்தனை கஷ்டங்களும் முடிவுக்கு வரும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து, மன நிம்மதியை அடைவீர்கள். நீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி கிடைக்கலாம். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.   

6 /8

மிதுனம் (Gemini): சனி பகவானின் உதயம் இவர்களுக்கும் சுபமாகும். மிதுன ராசிகளின் 8ம், 9ம் வீட்டில் சன பகவான் இருப்பார். 10ம் வீட்டில் சனி உதயமாவார். இதனால் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். ஆசிரியர்கள், பெற்றோர், ஆலோசகர்கள் தரப்பில் நல்ல ஆதரவு கிடைக்கும். முன்பு செய்த கடின உழைப்புக்கு இப்போது பலன் கிடைக்கும். வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் லாபம் உண்டாகும், தொழிலும் வளர்ச்சி அடையும். புதிய கார் அல்லது சொத்து வாங்கும் கனவு நிறைவேறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.   

7 /8

கடகம் (Cancer): கடக ராசிக்காரர்களுக்கு தான் சனி உதயம் அதிக பலனை தரும் எனலாம். சனி பகவானின் அருளால் எந்த தொழிலில் இருந்தாலும் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நினைத்தது நடக்கும். சனி 9ம் வீட்டில் உதயமாவதால் உங்களது பார்ட்னர் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும். வாழ்வில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும். முதலீடு செய்வதும் பலன் தரும். தைரியம் அதிகரிக்கும். வருமானம் அதிகரித்து சேமிப்பும் அதிகமாகும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.