சினிமா துறையில் கால் பதித்து தோல்வியடைந்த 5 இந்திய வீரர்கள் பற்றி பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் சினிமா துறையில் கால் பதித்துள்ளனர். அவர்களில் பலர் வெற்றி பெற்றிருந்தாலும், சிலர் தோல்விகளை அடைந்துள்ளனர். அப்படி சினிமா துறையில் தோல்வியடைந்த 5 இந்திய வீரர்கள் யார் யார் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான், டபுள் எக்ஸ்எல் படத்தில் நடிகராக அறிமுகமானார். அப்படத்தைல் அவர் நடிகை ஹுமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோருடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் அப்படம் வெற்றி பெறவில்லை.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், முதன்முதலில் சல்மான் கான்-அக்ஷய் குமார் நடித்த முஜ்சே ஷாதி கரோகி படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். பின்னர் அவர் பாஜி இன் ப்ராப்ளம் மற்றும் செகண்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட் போன்ற படங்களில் கௌரவத் தோற்றங்களில் நடித்தார். சிறப்பு தோற்றங்களில் மட்டுமே நடித்து வந்த ஹர்பஜன், தமிழ் திரைப்படமான ஃப்ரெண்ட்ஷிப்-பில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்தார். இருப்பினும், சினிமாவில் இவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
2003 ஆம் ஆண்டு சன்னி தியோல் நடிப்பில் சுனில் ஷெட்டி தயாரித்த அதிரடி நாடகமான கேல் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் அஜய் ஜடேஜா. பின்னர் 2009ஆம் ஆண்டு வெளியான பால் பால் தில் கே சாத் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர், மராத்தி திரைப்படமான சவ்லி பிரேமச்சியில் நடிகராக அறிமுகமானார். பின்னர் அவர் மாலைமால் திரைப்படத்தில் நசிருதீன் ஷாவுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார். ஆனால் அப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அன்னார்த், பால் பால் தில் கே சாத் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் வினோத் காம்ப்ளி சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்தார். இது கிரிக்கெட் பயணத்தை தாண்டி அவரது மற்றொரு பரிமாணத்தைச் காட்டியது.