'திரௌபதி 2' ரிலீஸ் தேதி மாற்றம்: பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை!

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், தற்போது தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

1 /6

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள 'திரௌபதி 2' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

2 /6

பொங்கல் தினத்தில் அதிகளவிலான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தாலும், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.  

3 /6

இப்படம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

4 /6

'திரௌபதி 2' ஒரு வரலாற்றுப் புனைவு  திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  

5 /6

இது குறித்து இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட பதிவில், "திரௌபதி 2 மிகப்பெரிய உழைப்பு மற்றும் பலரின் கனவு. சரியான முறையில் அதிக திரையரங்குகளில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.  

6 /6

பொங்கல் அன்று வெளியாகும் மற்ற திரைப்படங்கள் வெற்றிபெற படக்குழுவினர் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.