ரேஷன் கடைகளில் இனி 5 கிலோ கோதுமை கிடையாதா...? அதிர்ச்சி தகவல்!

Ration Card News: ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தலா 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

Wheat Allocation For Ration Cards: ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு, தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு கோதுமையை ஒதுக்கீடு செய்யும். அந்த வகையில், தற்போது கோதுமை ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 /8

தமிழ்நாடு அரசின் நியாய விலை கடைகளில் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. அரிசிக்கு பதில் கோதுமையையும் பெற்றுக்கொள்ளலாம். இது ஒரு அட்டைக்கு 5 கிலோ முதல் 10 கிலோ வரை கோதுமை வழங்கப்படுகிறது.

2 /8

மாநகராட்சி பகுதிகளில் கோதுமையை 10 கிலோ வரை கோதுமை வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் தேவைகேற்ப 5 கிலோ வரை வழங்கப்படுகிறது.

3 /8

ரேஷன் அட்டைத்தாரர்கள் தங்களின் விருப்பத்தின்பேரில் அரிசிக்கு பதிலாக இலவசமாக கோதுமையை பெற்றுக்கொள்ளலாம். இது தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

4 /8

இந்த கோதுமையை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசே ஒதுக்கீடு செய்து வருகிறது. இதுவரை மொத்தம் 7 லட்சத்து 25 ஆயிரத்து 482 மெட்ரிக் டன் கோதுமை தமிழ்நாட்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

5 /8

அந்த வகையில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவசமாக கோதுமை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு மாதம் 17 ஆயிரத்து 100 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது இதை மத்திய அரசு குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

6 /8

தொடக்க கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 13 ஆயிரத்து 500 டன் கோதுமை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தது. அதன்பின் 2023ஆம் ஆண்டு வாக்கில் மாதம் 8,500 டன்னாக கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. 

7 /8

அதன் பின் தமிழ்நாடு அரசின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம்  கோதுமை ஒதுக்கீடு 17 ஆயிரத்து 100 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இம்மாதம் முதல் 8 ஆயிரத்து 576 டன்னாக கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டது.

8 /8

தற்போது கோதுமை குறைக்கப்பட்டுள்ளதால், ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு 2 கிலோ கோதுமை மட்டும் வழங்க தமிழ்நாடு உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது 5 கிலோ கோதுமை வழக்கம்போல் வழங்கப்படாததால் ரேஷன் அட்டைத்தாரர்கள், ரேஷன் ஊழியர்களின் மீது கடும் அதிருப்தி அடைவதாக தகவல்கள் கூறுகின்றன. விரைவில் பழையபடி கோதுமை ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும்பட்சத்தில் இந்த பிரச்னையும் முடிவுக்கு வரும்.