சுக்கிரனும் புதனும் சேர்வதால்... இந்த 4 ராசிகளுக்கு லாபம் கொட்டும்... 4 நாளில் வரும் நல்ல காலம்
ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும் ஒவ்வொரு நேரத்திற்கும் பெயர்ச்சி அடையும், அதன் நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் பெயர்ச்சி என்பது சில சுபமான யோகங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
ஜோடத்தின்படி, புதன் கிரகம் அறிவு, பேச்சு, வணிகம், அதிகாரம் ஆகியவற்றை கொடுக்கும். இந்நிலையில் புதன் கிரகம் சுக்கிரன் உடன் இணைய ( Venus Mercury Conjunction) உள்ளது. டிச. 13ஆம் தேதி புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் லாப திருஷ்டி யோகம் (Labh Drishti Yog) ஏற்படுகிறது. இது சுபமான யோகமாக கருதப்படுகிறது.
இந்த யோகத்தால் உங்களின் வேலையில் சிறப்பமான மாற்றம் வரும். அந்த வகையில், வரும் டிச.13ஆம் தேதி லாப திருஷ்டி யோகத்தால் இந்த நான்கு ராசிகளின் பணி வாழ்க்கையில் சிறப்பான மாறுதல் ஏற்பட உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வரும்.
துலாம் (Libra): லாப திருஷ்டி யோகத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் வணிகத்தில் பண வரவு என்பது முன்பை விட அதிகரிக்கும். உங்களின் தந்தையிடம் இருந்தும் உங்களுக்கு நிதியுதவி கிடைக்கும். தொழிலில் நீங்கள் நினைத்தது நடக்கும். தனியாரில் வேலை செய்பவர்களுக்கு வேறு இடத்தில் பணி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
சுக்கிரனின் பலனால் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்விலும் நல்ல காலம் பிறக்கப்போகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
மிதுனம் (Gemini): உங்கள் வாழ்வின் பொருளாதார நிலையில் இந்த சமயத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். தொழிலும் பண வரவும் அதிகரிக்கும். தனியாரில் வேலை செய்பவர்களுக்கும் இது அதிக பலன்களை வழங்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களின் குடும்ப சொத்தில் இருந்து உங்களுக்கு பங்கு கிடைக்கலாம். வாழ்க்கை வசதியாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாறும். காதல் வாழ்வு, திருமண வாழ்விலும் நல்ல காலம் பிறக்கிறது.
ரிஷபம் (Taurus): தொழில் செய்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வணிகத்தில் பெரிய முன்னேற்றம் வரும். இதனால் தொழிலிலும் பண வரவு அதிகரிக்கும். மேலும், வாழ்விலும் பொருளாதாரம் பலமாகும். காதல் வாழ்வும் சிறப்பாக மாறும். வீட்டில் மனைவியிடத்தில் இருந்தும் உங்களுக்கு ஆதரவு உண்டாகும். தனியாரில் வேலை பார்ப்பவர்களுக்கும் நல்ல செய்தி வரலாம்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள், கணிப்புகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.