சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: பணமழையில் நனையப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! செத்துக்கள் குவியும்

Written ByR Balaji
Published: May 09, 2026, 03:19 PM IST|Updated: May 09, 2026, 03:19 PM IST

Shukra Peyarchi 2026: சுக்கிரன் மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியான நிலையில், இந்த பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது என்பதை பார்க்கலாம். 

 

1/6

ஜோதிட சாஸ்திரத்தில் செல்வம், காதல், அழகு மற்றும் ஆரம்பரத்திற்கு காரணியாக கருதப்படும் சுக்கிரன், மே 08 அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகி உள்ளார். சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு மட்டும் பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தர இருக்கிறது. 

 

2/6

மேஷம் (Aries): மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் புதிய வாய்ப்புகளை கொண்டு வரும். பணப்பிரச்சனை தீரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பேச்சு திறன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். 

 

3/6

ரிஷபம் (Taurus): சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி, ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முதலீடுகள் லாபம் தரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். 

 

4/6

கடகம் (Cancer): சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிர ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்களை தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உருவாகலாம். காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணவரவு அதிகரித்து சேமிப்பு உயரும். 

 

5/6

துலாம் (Libra): துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். சுக்கிரன் இந்த ராசியின் அதிபதி என்பதால், தொழில், பணவரவு, திருமண வாழ்க்கை என அனைத்திலும் சாதகமான பலன்களை அடைய முடியும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம். மேலும், தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். 

 

6/6

பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.