சுக்கிரன் மார்கி: அடுத்த 45 நாள்கள் இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்

Shukran Margi In Pisces: மீனத்தில் சுக்கிரன் பகவான் வக்ர நிலையில் இருந்து நேர் திசைக்கு ஏப். 13 அன்று மாறியிருக்கிறார். இதனால், அடுத்த 45 நாள்களுக்கு இந்த 5 ராசிகளின் வாழ்வில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மீனத்தில் சுக்கிர மார்கியால், லட்சுமி நாராயணன் யோகம் மற்றும் மால்வியா யோகம் உருவாகி உள்ளது. சுக்கிர பகவான் உங்களின் ஜாதகத்தில் உச்சத்தில் இருந்தால், வாழ்க்கையே மகிழ்ச்சியானதாக மாறிவிடும். 


 

1 /8

சுக்கிர பகவான் செல்வம், காதல், அழகு போன்றவற்றை வழங்குபவராக உள்ளார். ஜோதிட கணக்கின்படி, கடந்த ஏப். 13ஆம் தேதி முதல் சுக்கிர பகவான் மீனத்தில் வக்ர நிலையில் இருந்து நேர் திசைக்கு மாறுகிறார்.   

2 /8

சுக்கிர பகவானின் இந்த மாற்றத்தால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு உண்டாகும். சுப காரியங்கள் நடக்கும். அந்த வகையில், ஏப். 13ஆம் தேதி தொடங்கி அடுத்த 45 நாள்கள் வரை லட்சுமி நாராயணன் யோகம் மற்றும் மால்வியா யோகம் உருவாகும். இந்த இரண்டு யோகங்களால் இந்த 5 ராசிகலின் வாழ்வில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.   

3 /8

மீனம்: சுக்கிர பகவானின் நேர் திசை மாற்றம் மீனத்தின் முதல் வீட்டில் அமையும். இதனால் தன்னம்பிக்கை அதிகமாகும். நீண்ட நாட்களாக தேங்கியிருந்த வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெறும். முன்பை விட பொருளாதார நிலை பலமாகும். குடும்பச் சூழல் நேர்மறையாக மாறும். வாழ்வில் புதிய ஆற்றலுடன் இயங்குவீர்கள்.  

4 /8

தனுசு: சுக்கிர பகவான் நேர்த்திசையில் மாறுவது இந்த ராசிக்காரர்களின் நான்காம் வீட்டில் உண்டாகும். இதனால் வாழ்வில் அமைதியும் அன்பும் பெருகும். காதல் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தேங்கி இருந்த வேலைகள் நடைபெறும். புதிய சொத்து அல்லது வாகனங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். திடீர் பணவரவு வரவும் வாய்ப்புள்ளது.  

5 /8

விருச்சிகம்: சுக்கிர பகவானின் நேர்த்திசை மாற்றம் இந்த ராசிக்காரர்களின் ஐந்தாம் வீட்டில் நிகழும். இது காதல் வாழ்க்கையில் சாதகமான சூழலை உருவாக்கும். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தியை பெறுவீர்கள். வேலையிலும் தொழிலிலும் வெற்றி கிடைக்கும். சாத்தியை கூறுகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் பெருகும்.  

6 /8

கன்னி: சுக்கிரனின் இந்த நேர்த்திசை மாற்றம் கன்னி ராசிக்காரர்களின் ஏழாம் வீட்டில் உண்டாகும். இதனால் காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடலாம், மனைவியுடனான உறவும் பலப்படும். பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகம். பழைய பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். நிதி நிலைமை முன்னேற்றம் காணும். வாழ்விலும் தொழிலிலும் ஒரு நிலையான தன்மையை இந்த காலகட்டத்தில் அடைவீர்கள்.  

7 /8

கடகம்: சுக்கிரனின் இந்த நேற்றைய மாற்றம் கடக ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டில் உண்டாகும். இது புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்களை வாங்குவதற்கான உகுந்த நேரமாகும். தொழில்களை விரிவடைய வைக்கவும் லாபத்தை பெருக்கவும் இந்த காலகட்டத்தில் அதிக வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நிகழும் முன்பை விட பொருளாதார நிலை உயரும். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இந்த காலகட்டம் அதிர்ஷ்டமான காலகட்டமாகும்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.