Shukran Sevvai Yuti: சுக்கிரன் மற்றும் செவ்வாய் நாளை முதல் இணைய உள்ளதால் பிரதியுதி யோகம் உண்டாகும். இதனால் இந்த 4 ராசிகளின் பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் வலுபெறும்.
சுக்கிரன் (Shukran) ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் உங்களின் வாழ்வு வளமாகும். இதில் செவ்வாய் (Sevvai) பகவானும் இணைவதால் நிச்சயம் சுபமான நிகழ்வுகள் கைக்கூடி வரும்.
ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி எந்தளவிற்கு முக்கியமானதோ, அந்தளவிற்கு இரு கிரகங்கள் சேர்வதும் முக்கியமானதாகும்.
அந்த வகையில், சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைவதால் (Venus Mars Conjunction) நாளை (டிச.12) பிரதியுதி யோகம் உருவாக உள்ளது.
இந்த பிரதியுதி யோகத்தால் நான்கு ராசிகள் பலன் அடைவார்கள் எனலாம். அந்த நான்கு ராசிகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
விருச்சிகம் (Scorpio): பிரதியுதி யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை பலமடையும். தொழிலும் லாபம் கிடைக்கும். முதலீட்டால் பண பலன் அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
துலாம் (Libra): இந்த யோகத்தால் வணிகத்தில் பெரும் முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதாரம் வலுபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். திருமண வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.
ரிஷபம் (Taurus): செவ்வாய் பகவானின் அருள் இந்த ராசிக்காரர்களுக்கு முழுவதுமாக கிடைக்கும் என்பதால் நிலம் மற்றும் சொத்து ஆகியவற்றில் இருந்து பண பலன் அதிகரிக்கும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் பணப் புழக்கம் அதிகரிக்கும், பொருளாதாரம் வலுபெறும். ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.
மேஷம் (Aries): இவர்களின் வாழ்வில் பொருளாதார நிலை சிறப்பான இடத்தை அடையும். தொழிலில் லாபம் கொட்டும். சுக்கிரன் அனுகிரகம் கிடைக்கும். பணியிடத்திலும் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். முதலீட்டில் பெரிய பலன்கள் கை மேல் கிடைக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.