சுக்கிரனின் வக்ர நிலை: அடுத்த 90 நாள்கள்... இந்த 4 ராசிகளின் வாழ்க்கை ஜெக ஜோதியாய் ஜொலிக்கும்!

Shukran Vakri 2025: சுக்கிர பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் மாறியிருப்பதால், அடுத்த 90 நாள்களுக்கு இந்த 4 ராசிகளின் வாழ்க்கை ஜெக ஜோதியாக ஜொலிக்கப்போகிறது.

Venus Retrograde In Pisces: சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார். இன்று அவர் வக்ர நிலைக்கு மாறினார். வரும் ஏப். 13ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீனத்தில் நேர் திசைக்கு மாறுவார். அடுத்து வரும் மே 31ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுவார்.

1 /8

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பகவானின் (Venus) தாக்கம் இருந்தால் நிச்சயம் அது உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். காரணம், சுக்கிர பகவான் உங்களுக்கு செல்வத்தை அள்ளி தருவார், மகிழ்ச்சியை பெருக்குவார், சொத்துக்களை அதிகரிக்கச் செய்வார், சொகுசு வாழ்க்கை வழிவகுப்பார் எனலாம்.

2 /8

அந்த வகையில், இன்று சுக்கிர பகவான் அவரது இயக்கத்தை மாற்றி வக்ர நிலைக்கு (Venus Retrograde In Pisces) மாறியுள்ளார். மீன ராசியில் இருக்கும் சுக்கிர பகவான் இன்று அதிகாலை 6.04 மணிக்கு வக்ர நிலைக்கு மாறியிருக்கிறார்.

3 /8

வரும் ஏப். 13ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் நேராக மாறுவார். அடுத்து மே 31ஆம் தேதிவரை மீனத்ததில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சி (Venus Transit In Aries 2025) ஆகிறார். அந்த வகையில், இன்று தொடங்கி மே 31ஆம் தேதி வரை அதாவது அடுத்த 90 நாள்களுக்கு இந்த 4 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் காத்திருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.

4 /8

மேஷம் (Aries): சுக்கிரன் பகவான் மேஷத்தின் இரண்டாம் மற்றும் ஏழாம் வீட்டின் அதிபதியாக இருக்கிறார். 12வது வீட்டில் வக்ர நிலையிலும் இருக்கிறார். இதனால், உங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்திலும், தொழிலும் பெரியளவில் லாபம் கிடைக்கும்.

5 /8

ரிஷபம் (Taurus): சுக்கிர பகவான் வக்ர நிலையில், ரிஷபத்தின் 11வது வீட்டில் இருக்கிறார். இதனால் செல்வம் அதிகரிக்கும், முடியாத வேலையும் நிறைவடையும். நீங்கள் எந்த துறையில் பணியில் இருந்தாலும் வெற்றியே கிடைக்கும். தொழிலிலும் பெரிய நன்மைகள் இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

6 /8

துலாம் (Libra): சுக்கிர பகவானின் வக்ர நிலை மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். வாழ்வில் நேர்மறையான மாற்றங்களும் நிறைய இருக்கும். பூர்வீக சொத்தின் மூலம் நன்மை கிடைக்கும். திடீர் பணவரவும் ஏற்படலாம்.

7 /8

தனுசு (Sagittarius): வக்ர நிலையில் சுக்கிர பகவான் மாறி, தனுசு ராசியின் 4ம் வீட்டில் இருப்பார். உங்கள் வாழ்வில் பொருள்களின் வரவும் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களின் மதிப்பும் உயரும். வருமானமும் உயரும். வீடு அல்லது வாகனங்களை வாங்கும் வாய்ப்பு உயரும். பயணம் செய்வதற்கு சுபமான காலகட்டமாகும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.