புது வருட உறுதி மொழிகளை தவறாமல் பின்பற்ற 7 எளிய டிப்ஸ்!

Easy Tips To Follow New Year 2025 Resolutions : நம்மில் பலர் புதுவருடம் பிறக்கும் இந்த தருவாயில் அதற்கான சில உறுதி மொழிகளையும் எடுத்திருப்போம். ஆனால் அதை தவறாமல் பின்பற்றுவது எப்படி? இதோ அதற்கான சில டிப்ஸ்!

Easy Tips To Follow New Year 2025 Resolutions : 2025 புதுவருடம் பிறக்க இருக்கிறது. அனைத்து வருடங்களும் நம்மில் பலர் சில உறுதி மொழிகளை கையில் எடுத்துவிட்டு, அதை சில நாட்கள் தொடர்ந்து செய்வோம். ஆனால், ஒரு கட்டத்தில் அதனை விட்டுவிடுவோம். அப்படி, 2025ஆம் வருடத்திலும் செய்யாமல் இருக்க நாம் சில ஈசி டிப்ஸ்களை கடைப்பிடிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா?

1 /7

ஜிம்மிற்கு செல்ல வேண்டும், எடையை குறைக்க வேண்டும் என்று மட்டும் யோசிக்காமல் வேறு ஏதேனும் ஆசை இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டும் என முயற்சி செய்யுங்கள். நிதி நிலையை உயர்த்த, முதலீடு செய்வது உள்ளிட்ட விஷயங்களை செய்யுங்கள். 

2 /7

எடுத்தவுடன் நீங்கள் பெரிய மாற்றங்களையெல்லாம் உங்கள் வாழ்வில் எதிர்பார்க்க முடியாது. எனவே, சிறிய அடிகளை எடுத்து வையுங்கள். அதுதான் பெரிய வெற்றிகளுக்கு உங்களை எடுத்துச்செல்லும். 

3 /7

உங்கள் உறுதிமொழிகளை நீங்கள் பின்பற்றுவது போல கனவு காணுங்கள். உங்கள் வெற்றிகளை எட்டுவது போலவும், உங்கள் முயற்சிக்கான பலன்களை அடைவது போலவும் கனவு காணுங்கள். 

4 /7

உங்களை ஊக்கப்படுத்தும் நபர்களை கூடவே வைத்திருங்கள். நீங்கள் சில விஷயங்களை பின்பற்ற தவறினால் கூட அவர்கள் உங்களை நல்வழிப்படுத்துவீர்கள். 

5 /7

உங்கள் முயற்சிகள் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், தினசரி அந்த முயற்சியை நீங்கள் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். 

6 /7

உங்களது முயற்சிகளும் அதற்கு வரும் ரிசல்ட்களும் மிகச்சரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இப்படி அனைத்தையும் “சரியாக செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தோடு இருந்தால் நீங்கள் எதையும் செய்யாமல் இருந்து விடுவீர்கள். 

7 /7

உங்கள் உறுதிமொழிகளை பின்பற்ற ஆரம்பித்தவுடன் உங்களுக்கு சிறு சிறு வெற்றிகள் கிடைக்க ஆரம்பிக்கும். அப்போது அதனை கொண்டாட தவறிவிடக்கூடாது.