How To Boost Metabolism: மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பொதுவாகவே பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு, செரிமான பிரச்சனைகள் காரணமாக அமைகின்றன. உடல் பருமனை குறைப்பது முதல், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பராமரிப்பது வரை, மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும்.
வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் சிறப்பாக இல்லை என்றால், உடல் பருமனை குறைப்பது சாத்தியமில்லை. இதனால் செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால், ஊட்டச்சத்து பற்றாக்குறையும் ஏற்படும்.
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க, நம் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் சில எளிய மாற்றங்களை செய்வது பலன் கொடுக்கும். ஏனெனில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக உள்ளது.
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் டீடாக்ஸ் பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, மெட்டபாலிசத்தை சிறப்பாக தூண்டும். இதற்கு சீரக நீர், இலவங்கப்பட்டை நீர், ஓமம் நீர் போன்ற பானங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் மசாலாக்களில் கார சுவை கொண்ட மிளகாய் மிளகு ஆகியவை அடங்கும். கார உணவுகள் மெட்டபாலிசத்தை தூண்டுவதாக, ஆராய்ச்சிகள் பல கூறுகின்றன.
வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க, தண்ணீர் மிக முக்கியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதால், உடலின் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கும்.
பொதுவாக, மூன்று வேளை உணவிற்கு பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேளைகளில் அடிக்கடி சாப்பிடுவது, மெட்டபாலிசத்தை தூண்டும் என்று ஆய்வுகள் பல கூறுகின்றன. இதன் மூலம் நாம் உண்ணும் அளவையும் உணவின் அளவையும், சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
உங்கள் டயட்டில் புரத உணவு கட்டாயம் இருக்க வேண்டும். அது எந்த வேலை உணவாக இருந்தாலும், புரோட்டின் நிறைந்த உணவு கண்டிப்பாக தேவை. இதனால் தசைகள் வலுவடைவதால், வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும்.
வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க, தினம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக முடிந்தவரை படிக்கட்டுக்களை பயன்படுத்தலாம்
வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க, நல்ல ஆழ்ந்த தூக்கம் அவசியம். தூக்கமின்மை, அல்லது இரவில் அதிக நேரம் விழித்திருந்து பகலில் தூங்குதல் ஆகியவை செரிமான ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.