SIP Mutual Fund: மாதம் ரூ.4000 முதலீட்டை ரூ.1.2 கோடியாக பெருக்கும் முதலீட்டு மந்திரம்

Investment Tips: சிறுதுளி பெருவெள்ளம் ஆகும் என்பது பழமொழி. சிறுசேமிப்பு என்பது நெருக்கடி காலங்களிலும், முதுமை காலங்களிலும், நெருக்கடியை சமாளித்து, வசதியாக வாழ உதவ உறுதுணையாக இருக்கும்.

 

சேமித்தால் மட்டும் போதாது. அதனை சரியான இடத்தில் சரியான விதத்தில் முதலீடு செய்வதால், ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம். குறைவான சம்பளம் பெற்றால், சேமிக்க முடியாது என்பது கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. வருமானம் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி கொண்டால், கோடிகளில் நிதியை சேர்ப்பது எளிதாகும்.

 

1 /9

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவருமே, சேமிப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்த கேட்டிருப்போம். சேமித்த பணத்தை, சிறந்த வருமான கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதால், சிறிய அளவிலான முதலீடு கூட கோடிக்கணக்கில் பணத்தை சேர்க்க உதவும்.

2 /9

சாமானிய மக்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக பரஸ்பர நிதியம் உள்ளது. எஸ்ஐபி என்ன சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் முறையில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை, முதலீடு செய்து வந்தால், பணத்தை எளிதில் பன் மடங்காக்கலாம்.

3 /9

பங்குச்சந்தை நிலை தற்போது சரிவில் இருந்தாலும், நீண்ட காலம் முதலீட்டை செய்ய நினைப்பவர்கள் இதுகுறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால் சந்தை சரிவில் இருக்கும் போது செய்யும் முதலீடுகளால், எதிர்காலத்தில் மிகச்சிறந்த வருமானத்தை பெரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

4 /9

இன்றைய காலகட்டத்தில் மாதம் ரூபாய் 4000 சேர்ப்பது என்பது எளிதான காரியம் தான். இதனை எஸ் ஐ பி மூலம் பரஸ்பர நிதியத்தில்  முதலீடு செய்து வந்தால், ஒரு கோடி சேர்க்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

5 /9

ரூபாய் ஒரு கோடி அளவில் கார்ப்பஸ் சேர்க்க, எவ்வளவு காலம் என்று கணக்கிடும்போது, பரஸ்பர நிதியத்தில் கிடைக்கும் சராசரி வருமானத்தை கணக்கில் கொண்டு அளவிட வேண்டும். தற்போது ஆண்டு சராசரி வருமானம், 12 % என்ற அளவில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

6 /9

மாதந்தோறும் ரூ.4,000 SIP என்ற அளவில் 10 ஆண்டுகள் தொடர் முதலீடு செய்து வந்தால்,  மொத்த முதலீட்டுத் தொகை ரூ.4,80,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.4,16,144  என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.8,96,144  என்ற அளவிலும் இருக்கும்.

7 /9

மாதந்தோறும் ரூ.4,000 SIP என்ற அளவில் 20 ஆண்டுகள் தொடர் முதலீடு செய்து வந்தால், மொத்த  முதலீட்டுத் தொகை ரூ.9,60,000 என்ற அளவிலும், மூலதன ஆதாயங்கள் ரூ.27,19,429 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.36,79,429 என்ற அளவிலும் இருக்கும்.

8 /9

மாதந்தோறும் ரூ.4,000 SIP என்ற அளவில் 30 ஆண்டுகள் தொடர் முதலீடு செய்து வந்தால், மொத்த  முதலீட்டுத் தொகை ரூ.14,40,000 என்ற அளவிலும், மூலதன ஆதாயங்கள் ரூ.1,08,83,893 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.1,23,23,893 என்ற அளவிலும் இருக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.