SIP : ரூ. 3000 முதலீட்டிலும் கோடீஸ்வரன் ஆகலாம்... எளிய கணக்கீடு இதோ

SIP Mutual Fund: மாதம் ரூ. 20000 சம்பளம் வாங்குபவர் என்றாலும், திட்டமிட்டு சேமித்து அதனை முறையான திட்டங்களில் முதலீடு செய்தால், கோடீஸ்வர கனவை எளிதாக நினைவாக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதிய முதலீடுகள், சாமானியர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்களாக உள்ளன. இவற்றின் மூலம், வீடு, குழந்தைகளின் கல்வி, வாகனம் என உங்களது பல கனவுகள் நிறைவேறும்.

1 /8

பணத்தை பன்மடங்காக்கும் திட்டங்களில் SIP என்னும் பரஸ்பர நிதிய முதலீடு மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் மாதம் ரூ. 500 என்ற அளவில் கூட முதலீடு செய்யலாம் என்பதால், எளிய மக்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக உள்ளது.

2 /8

மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை பன்மடங்காக, அவசியம். இந்நிலையில் குறைவான சம்பளம் வாங்குபவர்கள், சிறிய அளவிலான முதலீட்டை நீண்ட காலம் தொடருவதால், கூட்டு வட்டி வருமானத்தின் ஆதாயத்தை முழுமையாக பெற்று ஆயிரம் கோடிகள் ஆக்கலாம்.

3 /8

SIP உத்தி மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ. 3000 என்ற அளவில் முதலீட்டை தொடங்குவதன் மூலம், ரூ.1 கோடிக்கும் அதிகமான கார் பசை உருவாக்கலாம். இதனை எளிய கணக்கீட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

4 /8

ரூ.3000 மாத முதலீடு: உங்களது முப்பதாவது வயதில் ரூ.3000 என்ற அளவிலான முதலீட்டை தொடங்கினால் கூட, 30 ஆண்டுகளுக்கு அதாவது உங்களது அறுபதாவது வயது வரை இதனை தொடர்வதால், கோடீஸ்வர கனவு நிறைவேறும்.

5 /8

மொத்த முதலீடு: 30 ஆண்டுகளில் நீங்கள் செய்த மொத்த முதலீடு ரூ.10,80,000 என்ற அளவில் இருக்கும். அதற்கு குறைந்தபட்சம் 12 % என்னும் ஆண்டு வருமானம் கிடைத்தால் கூட ஒரு கோடி ரூபாயை நீங்கள் பெறலாம்.

6 /8

கூட்டு வட்டி வருமானம்: மியூச்சுவல் ஃபண்டுகளின் மூலம் கிடைக்கும் வருமானம் கூட்டு வட்டி வருமானத்தின் அடிப்படையில் என்பதால், நீண்டகால முதலீட்டில் அதிகபட்ச பலனை பெறலாம்.

7 /8

சுமார் ரூ.10 லட்சம் முதலீட்டில், மூலதன ஆதாயம் மட்டும் ரூ. 95 லட்சம் என்ற அளவில் இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் மொத்த கார்ப்பஸ் ரூ.1,05,89,741.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.