மதராஸி திரைப்படத்தின் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?

Written ByYuvashree
Published: Sep 06, 2025, 12:30 PM IST|Updated: Sep 06, 2025, 12:30 PM IST

Madharaasi Movie Box Office Collection Day 1 : சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம், மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.  இப்படம் முதல் நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Madharaasi Movie Box Office Collection Day 1 : அமரன் படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம், மதராஸி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இது, அவருக்கு கம்-பேக் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், மதராஸி படம் மொத்தமாக செய்திருக்கும் வசூல் எவ்வளவு என்பதை பார்ப்போமா?

Madharaasi1/7

மதராஸி

ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது, மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அமரன் ப்ளாக் பஸ்டர் படத்திற்கு பிறகு, அவர் நடிக்கும் முதல்படம் இதுவாகும்.

AR Murugadoss2/7

ஏ.ஆர்.முருகதாஸ்

மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். ஒரு காலத்தில் பிரபல ஹீரோக்களை வைத்து ஹிட் படமாக கொடுத்து வந்த இவருக்கு, சமீபத்தில் வெளிவந்த சிக்கந்தர் படம் பெறும் சறுக்கலை தந்தது. 

Come Back3/7

கம் பேக்

மதராஸி படம், ரசிகர்களுக்கு நல்ல ஆக்‌ஷன் ட்ரீட்டை கொடுத்திருப்பதாக படம் பார்த்தவர்கள் விமர்சனங்களை கொடுத்திருக்கின்றனர். எனவே, இது ஏ.ஆர்.முருகதாசுக்கு நல்ல கம்பேக் படம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Love Portions4/7

காதல் காட்சிகள்

மதராஸி படத்தின் தங்கப்பூவே பாடல் நல்ல ஹிட் அடித்துள்ளது. ருக்மிணி வசந்த் மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடி படத்தில் நன்றாக இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

Review5/7

விமர்சனம்

வழக்கமாக அனைத்து சிவகார்த்திகேயன் படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், இப்படத்திற்கு பெரிதாக ரசிகர்கள் மத்தியில் எந்த எதிர்பார்ப்பும் எழவில்லை. இருப்பினும், படம் பார்த்தவர்கள், கதை நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Thuppaakki6/7

துப்பாக்கி

மதராஸி படத்தில் வித்யூத் ஜாம்வால் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்தான், விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் வில்லனும். விஜய், கடைசியாக நடித்த தி கோட் படத்தில் துப்பாக்கிய புடிங்க சிவா என சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கி கொடுத்தது பெரும் பேசு பொருளானது. இந்த ரெஃபரன்ஸ் மதராஸி படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Box Office Collection7/7

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

மதராஸி திரைப்படம், முதல் நாளில் இந்திய அளவில் ரூ.13 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்து இருப்பதும் வீக் எண்ட் என்பதால் படம் இன்னும் அதிக வசூலை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.