Solar Eclipse 2025 Warning In India: சந்திர கிரகத்தை அடுத்து, வரும் 29 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு கிரகணங்கள் நிகழ உள்ளதால், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Surya Grahan 2025 Latest News In Tamil: மார்ச் 29, 2025 அன்று நிகழும் சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எச்சரிக்கை குறித்து பார்ப்போம். இந்த சூரிய கிரகணத்தின் போது நாம் செய்யக்கூடியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? என்பதை பற்றி விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள்.
மார்ச் 29 ஆம் தேதி அன்று சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் நிகழும் நேரம் என்ன? இந்த சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும்? இந்த சூரிய கிரகணத்தின் போது பாதிக்கப்படக்கூடிய ராசிகள் என்ன? அதற்கான பரிகாரங்கள் என்ன? முழு விவரங்கள்.
சந்திரன் பூமியையும் பூமி சூரியனை சுற்றி வரும் நிலையில், சூரியன் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும் நிகழ்விற்கு சூரிய கிரகணம் என்று பெயர்.
சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மார்ச் 29 ஆம் தேதி பிற்பகல் 2:20 மணிக்கு தொடங்கி மாலை 6:13 மணிக்கு முடிவடைகிறது.
ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தெரியும்.
மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம்,
கிரகண நேரத்தில் சூரியனுடைய மந்திரமான ஆதித்ய குரு, உதயம் மற்றும் சிவனுடைய ஸ்தோத்திரங்கள், சிவபுராணம் ருத்ரம் ஆகியவற்றை சொல்லலாம். ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தையும் சொல்லலாம். சூரிய கிரகணம் முடிந்ததும் தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள் வேப்பிலை இழை கலந்து குளிக்கவும். அதன் பிறகு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரவும்.
கிரகணத்தின் போது நாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். கிரகண சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கத்தி, கத்திரிக்கோள் உள்ளிட்ட கூர்மையான பொருட்களை தொடவோ கையில் வைத்திருக்கவோ கூடாது. கிரகண நேரத்தில் எந்த சுபகாரியமும் செய்யக்கூடாது.
சூரிய கிரகணத்தின் போது இறை வழிபாடு செய்ய மிக ஏற்ற நேரமாகும். சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேருக்கோட்டில் இருப்பதால் நமக்கு அமையக்கூடிய எண்ணங்கள் கருத்துக்கள் சிந்தனைகள் ஒன்று கூடுவதற்கான நேரமாகும். அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதும் மந்திரங்களை உச்சரிப்பதும் சாதாரண நேரத்தில் கிடைக்கும் பலனை விட பல மடங்கு அதிகரிக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.