Kavya Maran: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் புதிய அணியை வாங்கி உள்ளார்.
1/6IPL: ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உரிமையாளர் காவ்யா மாறன் தற்போது இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் அணியை வாங்கி உள்ளார்.
2/6அதாவது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் தி ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை சன் டிவி நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக வாங்கி உள்ளது. இதனை சன் டிவி நெட்வொர்க் சுமார் 100.5 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,161 கோடி ஆகும்.
3/6சன் டிவி நெட்வொர்க் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் நிர்வகித்து வருகிறது. இதனை காவ்யா மாறன் வழிநடத்தி வருகிறார்.
4/6இந்த நிலையில், தற்போது 3வது கிரிக்கெட் அணியாக நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை வாங்கி உள்ளனர். இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விதமான பணிகளும் வரும் டிசம்பர் 2025க்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது.
5/6சன் டிவி நெட்வொர்க் நார்தர்ன் சூப்பர்சார்ஜஸ் அணியை வாங்கிய நிலையில், உலகின் பல்வேறு லீக் தொடர்களில் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக மாறி உள்ளது.
6/6இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் மற்றும் நைட் ரைடர்ஸ் குழுமம் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. தற்போது, இந்த பட்டியலில் சன் நெட்வொர்க்கும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.