ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்த அரசு! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

இன்னும் 3 வாரங்களில் புத்தாண்டு வர உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. DA உயர்விற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 /5

அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை கொடுத்துள்ளது மாநில அரசு. அகவிலைப்படியை (DA) 3% அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 9 லட்சம் குஜராத் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2 /5

குஜராத் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2016 விதியின் கீழ் DAவை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் சம்பளம் உயரும்.

3 /5

ஜூலை முதல் நவம்பர் வரையிலான மாதங்களுக்கான பணம், 2025 ஜனவரியில் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோர் கூடுதல் ஊதியம் பெற இது உதவும்.

4 /5

பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த புதிய சம்பளம் சென்று சேரும். இது ஆணையத்திடம் இருந்து ஊதிய உயர்வு பெற ஒப்புதல் பெற்றவர்களுக்கானது.  

5 /5

கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் மாற்றம் கொண்டு வர அரசு பரிசீலித்து வந்தது. இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.