பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன.. முழு விவரம்

Stroke Symptoms: தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது, அறிகுறிகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Stroke Symptoms: எனவே, பக்கவாதத்தில் அறிகுறிகள், அதனை எப்படி குணப்படுத்தலாம் போன்ற விவரங்களும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

1 /7

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் பக்கவாதத்தால் (Stroke) பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பக்கவாதத்தை குணப்படுத்த பல்வேறு மருந்துகள் தற்போது இருந்து வந்தாலும், அதனை குணப்படுத்துவது என்பது நீண்ட காலத்தை எடுக்கும்.   

2 /7

பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதாலோ அல்லது ரத்தக் கசிவு ஏற்படுவதாலோ ஏற்படுகிறது. இதனால், மூளை செல்கள் சேதமடைகின்றன. இதனால், பக்கவாதம் ஏற்படுகிறது.   

3 /7

மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானோருக்கு ரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பால் பக்கவாதம் ஏற்படுகிறது. ரத்தக்குழாய்களில் ஏற்படும் கசிவாலும் பக்கவாதம் ஏற்படும். மூளைக்குள் உள்ள ரத்த குழாய்களில் நாளடைவில் அடைப்பு ஏற்படுவதால் பக்கவாதம் ஏற்படலாம்.   

4 /7

இதுவே உடலில் கட்டி ஏற்பட்டு, அது உடைந்து, மூளைக்கான ரத்த நாளங்களுக்கு சென்று அடைப்பு ஏற்படுவதே ஸ்ட்ரோக் என அழைக்கப்படுகிறது. பக்கவாதத்திற்கான அறிகுறிகளை பொறுத்தவரை, மங்கலான பார்வை, பேசுவதில் சிரமம்,  குழப்பம், தலைவரி, தலைச்சுற்றல், முகத்தின் ஒருபகுதியில் தடை கட்டுப்பாட்டை இழத்தல், மறதி, மனநிலை மாற்றங்கள், குமட்டல், வாந்தி,  வலிப்புத்தாக்கங்கள், கேட்டல் திறன் குறைவது போன்றறை ஆகும்.   

5 /7

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது பேச்சுப் பகுதி பாதிக்கப்பட்டு பேச்சுகள் குளறலாம். மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. இதற்காக முறையான சிகிச்சை நீங்கள் கட்டாயம் பெற வேண்டும். பக்கவாதம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்றால் மூளைக்கு சரியான அளவு ரத்த ஓட்டம் கிடைக்காத வரை பக்கவாதம்  நீடிக்கும்.    

6 /7

பக்கவாதம் ஏற்பட்ட நிமிடத்தில் இருந்து 3 மணி நேரத்திற்குள் எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து செல்கிறீர்களோ நல்லது. இதன் மூலம், அவர்களை பழைய நிலைக்கு நம்மால் அழைத்து செல்ல முடியும். பக்கவாதத்தை வராமல் எப்படி தடுக்கலாம் என்றால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மட்டுமே.   

7 /7

 புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவையால் பக்கவாதம் ஏற்படுவதை  தடுக்கலாம். (பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)