சனி பெயர்ச்சி 2025: புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகள் இவைதான், ராஜவாழ்க்கை அமையும்
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் உண்டாகும்.
ஜோதிட கணக்கீடுகளின் படி 2025 ஆம் ஆண்டில் பல பெரிய கிரகங்கள் மாற உள்ளன. அடுத்த ஆண்டு சனிபகவான், குரு பகவான், ராகு, கேது, செவ்வாய் போன்ற அனைத்து முக்கிய கிரகங்களும் பெயர்ச்சியாகின்றன. தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கும் சனிபகவான் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை கொண்டு வரும். இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அனைத்து வித காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி காலம் நல்ல காலமாக இருக்கும். சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள் சமூகத்தில் கௌரவம் மரியாதையும் அதிகரிக்கும். நடக்காமல் இருந்த பல பணிகள் நடந்துமுடியும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்: மீனத்தில் சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். பொருளாதார நிலை வலுவடையும். பழைய கடன்களை எல்லாம் அடைத்து விடுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் சனியின் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். தொழில் விருத்தி அடையும். பணி இடத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வும் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். சனி பகவானின் முழுமையான அருள் கிடைக்கும்.
மகரம்: சனிப் பெயர்ச்சி மகர ராசிகளுக்கு சுபமானதாக அமையும். இவர்களுக்கு ஏழரை சனி முடிவடையும். ஆகையால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பல பணிகள் இப்பொழுது நிறைவேறும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி காலத்தில் சாதகமான மாற்றங்கள் தென்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சனிபகவானின் அருளால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.
சனி பகவான் கருணை உள்ளம் கொண்டவர். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். ஏழை எளியவர்களிடம் பரிவு காட்டி அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை போன்றவற்றை அவ்வப்போது தானம் செய்து உதவுபவர்களை அவர் எப்போதும் சோதிப்பது இல்லை.
சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் கூறலாம். இது தவிர, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.