சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான 2 ராஜயோகங்கள்: 5 ராசிகளுக்கு பொற்காலம், அருமையான நேரம்

Published: Apr 21, 2025, 03:52 PM IST|Updated: Apr 21, 2025, 03:52 PM IST

Sukran Peyarchi: சுக்கிரன் வக்ர நிவர்த்தியால் 2 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் சில ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் வக்ர நிவர்த்தி மற்றும் அதனால் உருவான ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் செல்வம், ஆடம்பரம், செழிப்பு  ஆகியவை சேரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sukran Peyarchi1/10

சுக்கிரன் பெயர்ச்சி

சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த நபருக்கு வேலையில் பதவி உயர்வு, தொழிலில் வளர்ச்சி, வாழ்க்கையில் நிதி ஆதாயம், மகிழ்ச்சி, அமைதி ஆகியவை கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. ஏப்ரல் 13 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார்.

Sukran Vakra Nivarthi2/10

சுக்கிரன் வக்ர நிவர்த்தி

சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால், மாளவ்ய ராஜயோகமும் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகியுள்ளது. இவை இரண்டும் மிகவும் சுபமான ராஜயோகங்களாக பார்க்கப்படுகின்றன.

Sukran Peyarchi Palangal3/10

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரன் வக்ர நிவர்த்தி மற்றும் அதனால் உருவான ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் செல்வம், ஆடம்பரம், செழிப்பு  ஆகியவை சேரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

Taurus4/10

ரிஷபம்

ரிஷபம்: சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அபரிமிதனாம நற்பலன்களை அள்ளித்தரும். பொருளாதார நிலை மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். முன்னர் செய்த முதலீடுகள் மூலம் நன்மை கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும்.

Cancer5/10

கடகம்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்யா மற்றும் லட்சுமி நாராயண் ராஜயோகம் அதிக நன்மை பயக்கும். இவர்களுக்கு அலுவலக பணிகளில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் விரிவாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். இதன் காரணமாக, குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.

Libra6/10

துலாம்

துலாம்: துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரன் பெயர்ச்சியின் போது, ​​துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான புரிதலும் அன்பும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த காலத்தில் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும்.

Scorpio7/10

விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் வக்ர நிவர்த்தியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம் சாதகமான பலன்களைத் தரும். வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் நிதி வளம் இருக்கும். மேலும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது நீண்ட கால நன்மைகளை வழங்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் மேம்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

Sagittarius8/10

தனுசு

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகங்களின் தாக்கத்தால் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் நிதி சிக்கல்கள் தீரும். திருமண வாழ்க்கையில் அன்பின் ஆழம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

Shukra Gochar9/10

சுக்கிரன் அருள் பெற

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், அறிவாற்றல், பேச்சாற்றல் ஆகியவை மேம்படவும், வாழ்க்கையில் பல வித வெற்றிகளைப் பெறவும் சுக்கிரன் அருள் மிக அவசியம். சுக்கிரன் அருள் பெற, ‘ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்வது நல்ல பலன்களை அளிக்கும்.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.