100 வருட அரிய சூரிய கிரகணம்! அன்றே சேரும் சனி - சூரியன்... இந்த 3 ராசிகளுக்கு பாதிப்பு!

Saturn Sun In Pisces: சனியும், சூரியனும் மீனத்தில் இணையும் அன்றைய தினமே, அரிய சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதற்கு பின் இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Rare Solar Eclipse: மார்ச் 29ஆம் தேதி அன்று 100 வருடங்களுக்கு பின் நிகழும் அரிய சூரிய கிரகணம் நடப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினமே கும்பத்தில் இருந்து சூரிய பகவான் மீனத்தில் பெயர்ச்சி ஆகிறார், அன்றுதான் சனியும் மீனத்தில் பெயர்ச்சி ஆகிறார். இவை இந்த 3 ராசிகளுக்கு அசுபமானதாக கருதப்படுகிறது.

1 /8

கிரகங்களின் இயக்கம், கிரகங்களின் தசை - மகாதசை உள்ளிட்டவை குறித்து வேத ஜோதிட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2 /8

அந்த வகையில், வரும் மார்ச் 29ஆம் தேதி அரிய சூரிய கிரகணம் (Solar Eclipse) ஏற்பட இருக்கிறது. அதாவது இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய கிரகணம் என வேத ஜோதிடம் கூறுகிறது. இந்த மார்ச் மாதத்திலேயே இது 2வது கிரகணம் ஆகும். கடந்த மார்ச் 14இல் சந்திர கிரகணம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 /8

ஒரே மாதத்தில் 2 கிரகணங்கள் நடைபெறுவது மிகவும் அசுபமானதாக கருதப்படுகிறது. அதே மட்டுமின்றி, மார்ச் 29இல் சனியும், சூரியனும் ஒரே ராசிக்கு மாற்றமடைவதும் இங்கு கவனிக்க வேண்டியது. எனவே, இதன் தாக்கம் வாழ்வில் ஏற்படாமல் இருக்க பரிகாரங்கள் மற்றும் வேண்டுதல்கள் செய்வது அவசியம். 

4 /8

சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். வரும் மார்ச் 29ஆம் தேதி சூரிய பகவான் மீனத்தில் பெயர்ச்சி ஆகிறார் (Sun Transit In Pisces) . அதேநாளில், சனி பகவானும் மீனத்தில் பெயர்ச்சி (Saturn Transit In Pisces) ஆகிறார். அன்றைய தினமே சூரிய கிரகணம் நடைபெறுவதால் இந்த 3 ராசிகளின் வாழ்வில் மிகவும் எதிர்மறையான தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

5 /8

மேஷம் (Aries): சனி பகவானின் பெயர்ச்சியை அடுத்து, இந்த ராசிக்காரர்களுக்கு சனி சதே சதி காலம் தொடங்கும். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். 

6 /8

கன்னி (Virgo): ஒரே ராசியில் சனி பகவானும், சூர்ய பகவானும் இணைகின்றனர். இதன் தாக்கம் இந்த ராசிக்காரர்களின் 7ம் வீட்டில் இருக்கும். இதனால், வேலையிலும், தொழிலும் பெரிய பிரச்னைகள் வெடிக்கலாம். கணவன் - மனைவி இடையேயும் பெரும் பிரச்னைகள் வரலாம்.

7 /8

சிம்மம் (Leo): சனி பெயர்ச்சிக்கு பின் இந்த ராசிக்கு சனி தைய்யா காலம் தொடங்கும். இதனால், இந்த ராசிக்காரர்கள் அவர்களின் பழைய நோய்களால் மீண்டும் பாதிப்புக்குள்ளாவார்கள். மேலும், பழைய எதிரிகளும் திரும்பி வந்து உங்களின் மதிப்பை கெடு நினைப்பார்கள். 

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.