சூரியனின் அருளால்... இந்த 6 ராசிகளுக்கு பங்குனி அட்டகாசமான தொடக்கமாக இருக்கும்

சூரிய பெயர்ச்சி 2025: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன் தனது ராசியை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகும் போதெல்லாம் தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில் மார்ச் மாத பெயர்ச்சியில் பங்குனி மாதம் பிறக்கிறது.

மார்ச் மாத சூரிய பெயர்ச்சியில், சூரிய பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். இதனால் பங்குனி மாதம் மீன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் பங்குனி மாதத்தின் அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

1 /8

சூரியன் வரும் மார்ச் மாதம் 14ஆம் தேதி அன்று, மாலை 6:50 மணிக்கு சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். சூரியனின் இந்த பெயர்ச்சியால் பல சுப யோகங்கள் உருவாகின்றன என்கின்றனர் ஜோதிடர் வல்லுநர்கள். இதனால் உருவாகும் புத ஆதித்ய யோகம் மற்றும் சுக்கிர ஆதித்ய யோகம் காரணமாக குறிப்பிட்ட ஆறு ராசிகள் பெரிதும் பயனடைவார்கள்.

2 /8

ரிஷப ராசியினருக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். நிதி ஆதாயங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். வேலை மற்றும் தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பை வழங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.  

3 /8

மிதுன ராசியினருக்கு சூரியனின் சம்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மூலம் வருமானம் அதிகரிக்கும். கடின உழைப்பின் மூலம் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு உருவாக்கும். பொருளாதார நிலை உயரும்.  

4 /8

கடக ராசியினருக்கு கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நிதிநிலை மேம்படும். வருமானம் அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும் என்பதால், பணத்தை சிறப்பாக சேமிக்க முடியும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

5 /8

விருச்சிக ராசியினருக்கு பொருளாதார ரீதியாக பலன் தரும் மாதமாக பங்குனி மாதம் இருக்கும். பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்தால், நல்ல லாபம் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நீடித்திருக்கும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.

6 /8

தனுசு ராசியினருக்கு சூரிய பெயர்ச்சி அற்புத மாற்றங்களை கொண்டு வரும். பங்குனி மாதம் அட்டகாசமான தொடக்கமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும், கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கான பலன்களை சிறப்பாக பெறலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பீர்கள். உறவுகள் மத்தியில் இணக்கம் அதிகரிக்கும்.

7 /8

மீன ராசியினருக்கு சூரியனின் அருளால், வாழ்க்கையில் சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் குறைவிருக்காது. உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகள் தோல்வியை சந்திப்பார்கள். நோய்வாய்ப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்காலத்தில் ஆதாயங்களை கொண்டு வந்து சேர்க்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பார்கள்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.