சூரியன் பெயர்ச்சியால் ‘சூரிய வம்சம்': ஒரே பாட்டில் கோடீஸ்வரராகும் யோகம் பெறும் 5 ராசிகள்

Published: Nov 04, 2025, 03:31 PM IST|Updated: Nov 04, 2025, 03:31 PM IST

Sun Transit: நவம்பர் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரியன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இது 5 ராசிகளுக்கு ராஜயோகத்தை கொண்டுவரும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Suriyan Peyarchi Palangal: சூரியன் சக்தி, தலைமைத்துவ குணங்கள், ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். இந்த மாதம் விருச்சிக ராசியில் நடக்கும் சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளின் பட்டியலை இங்கே காணலாம்.

Suriyan Peyarchi1/10

சூரியன் பெயர்ச்சி

கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற்றும் தந்தையர் பதவியின் காரணியாகக் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்றிருந்தால், அவர் மேன்மையான ஆளுமையுடன் விளங்குகிறார்.

Suriyan Peyarchi2/10

சூரியன் பெயர்ச்சி

சூரியன் நவம்பர் 16, 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:44 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆவார். இந்த சூரியன் பெயர்ச்சி ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.

Suriyan Peyarchi Palangal3/10

சூரியன் பெயர்ச்சி பலன்கள்

சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும்.  சூரியனின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களைத் தரும். மேலும் அவர்களின் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும்.

Leo4/10

சிம்மம்

சிம்மம்: சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் மரியாதையை அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும். உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளும் மேம்படும்.

Virgo5/10

கன்னி

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி சாதகமான நன்மைகளை அளிக்கும். சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் நீண்ட நாள் ஆசைகள் இப்போது நிறைவடையும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளை எளிதாக அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

Scorpio6/10

விருச்சிகம்

விருச்சிகம்: சூரியன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் பொற்காலத்தை கொண்டு வரும். தொழிலில் முன்னேற்றமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். மேல் அதிகாரிகளில் பாராட்டை பெறுவீர்கள். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

Sagittarius7/10

தனுசு

: சூரியன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான நன்மைகளை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு விவகாரங்கள் நல்லபடியாக முடியும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

Pisces8/10

மீனம்

மீனம்: சூரியன் பெயர்ச்சி மீனத்திற்கு நன்மை பயக்கும். நிறைவேறாமல் நிலுவையில் இருக்கும் பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும்.  வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Surya Gochar9/10

சூரியன் அருள் பெற

சூரியனின் அருள் பெற்று வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற தினமும் காலையில், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை கூறுவது நல்லது. மேலும், '"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி | தன்னோ சூர்ய: ப்ரசோதயாத்' என்ற சூரியன் காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.