Lung Detox: நுரையீரலை இயற்கையாக சுத்தம் செய்ய உதவும்... சில சூப்பர் உணவுகள்

சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரலை, ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக முக்கியம். நுரையீரல் தீவிரமாக பாதிக்கப்படும் போது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகும்.

இன்றைய வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கம் மாசடைந்த சுற்றுச்சூழல் ஆகியவற்றால், நுரையீரல் பாதிப்பு பலருக்கு இருப்பதை காணலாம். எனவே நுரையீரலை வலுப்படுத்த அதில் சேரும் அழுக்குகளையும் நச்சுக்களையும் அவ்வப்போது நீக்க வேண்டும்.

 

1 /9

மாசடைந்த காற்றை வாசிப்பதாலும், புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதாலும், மோசமான உணவுப் பழக்கம் காரணமாகவும், நுரையீரலில் நச்சுக்கள் சேர்ந்து, அதனால் மூச்சுக் குழாயில் அழற்சி ஏற்பட்டு சுவாசப் பிரச்சினைகள் உண்டாகின்றன.

2 /9

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், சுவாசப் பிரச்சனைகள் உண்டாவது தடுக்கவும், நுரையீரலில் சேரும் நச்சுக்களை இயற்கையாக நீக்கும் ஆற்றல் கொண்ட உணவுகளை வழக்கமாக சேர்த்துக் கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.

3 /9

மஞ்சள் என்னும் அற்புத மசாலாவை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதுடன், தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூளை சேர்த்து குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும்.  

4 /9

இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிப்பது, நுரையீரலை டீ டாக் செய்யும் அற்புத பானமாக இருக்கும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதனை சாத்தியமாக்கும்.  

5 /9

கீரை வகைகள் நுரையீரலை வலுப்படுத்தும் சிறந்த உணவு. அதிலும் மிக முக்கியமாக பசலைக் கீரை சுவாச பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமாவை போக்கும் அருமருந்து என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். இதில் ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்களான, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், வைட்டமின் இ போன்ற சத்துக்கள் உள்ளன.  

6 /9

ஆப்பிள் பல ஆரோக்கிய நலன்களை கொண்ட அற்புத பழங்களில் ஒன்று. இதில் உள்ள பிளவோனாய்டுகள், நுரையீரலை வலுப்படுத்துவதோடு, ஆஸ்துமாவை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டவை என ஆய்வுகள் பல கூறுகின்றன.

7 /9

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் நுரையீரலை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து சுவாசப் பிரச்சனைகளை தடுப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

8 /9

வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகேடோ ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தது. இதில் உள்ள க்ளுகோதையோன் ஃப்ரீ ராடிக்கல்களால் நுரையீரல் பாதிக்கப்படுவதை தடுத்து, அதில் சேர்ந்துள்ள நச்சுக்களையும் அழுக்குகளையும் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.  

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.