Happy Hormone Booster: மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்து, ஊக்கத்தை தூண்டும் வேலையை டோபோமைன் என்னும் ஹார்மோன் செய்கிறது. நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், சிந்தித்து செயல்படவும் இந்த ஹார்மோன் உதவுகிறது.
டோபோமைன் நல்ல உணர்வுகளை கொடுக்கும் ஹார்மோன் என்பதால், ஃபீல் - குட் (Feel Good) ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஹார்மோனை தூண்டும் உணவுகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதால், மகிழ்ச்சியாக இருக்கலாம்.
மன நிலைக்கும் ஹார்மோன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், நமது மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தை போக்கி மனதிற்கு சந்தோஷ உணர்வை அளிப்பதுடன், ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் டோபோமைன் ஹார்மோனை தூண்ட உதவும், டைரோசைன் அதிக அளவில் உள்ளதால், இது மனநிலையை மேம்படுத்துகிறது.
வேர்க்கடலையில் உள்ள நியாசின், மூளை ஆரோக்கியத்திற்கும், டோபோமைன் ஹார்மோனை தூண்டுவதற்கும் உதவுகிறது.
பாதாம் பருப்பில் உள்ள டைரோசைன் என்னும் அமினோ அமிலம், ஹார்மோன் உற்பத்திக்கு தேவையான முக்கிய கலவை ஆகும்.
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் டோபோமைன் ஹார்மோனை தூண்ட பெரிதும் உதவுகின்றன.
ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், டோபோமைன் ஹார்மோனை வெளியிடும் நியூரான்களை பாதுகாக்கின்றன.
பீட்ரூட்டில் உள்ள பெடடைன், டோபோமைன் ஹார்மோனை தூண்ட உதவும். அதோடு இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது
மீன் உணவுகள் குறிப்பாக டூனா வகை மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், டோபோமைன் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, டோபோமைமன் ஹார்மோன் உற்பத்திக்கு தேவையான மற்றோரு முக்கிய ஊட்டச்சத்து.
கீரை வகைகளில் ஃபோலேட் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது டோபோமைன் ஹார்மோன் உற்பத்திக்கு தேவையான முக்கிய கனிமம் ஆகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.