Liver Detox: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்திகரிக்கும் ஒரு பாக்டரி ஆக விளங்கும் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், கடுமையான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். கல்லீரலில் சேரும் நச்சுக்களையும், கொழுப்பையும் நீக்கும் ஆற்றல் கொண்ட உணவுகள் இதற்கு பெரிதும் உதவும்.
கல்லீரல் ஆரோக்கியம்: அடிக்கடி சோர்வாக உணர்வது, அடிக்கடி அஜீரண பிரச்சனைகள் ஏற்படுவது உங்கள் கல்லீரல் செயலிழந்திருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இதனை உணர்ந்து கொண்ட கல்லீரலில் சேரும் நச்சுக்களையும், கொழுப்பையும் நீக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால், பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ஆரோக்கியமற்ற உணவுகள், ஆல்கஹால், மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை போன்ற காரணங்களால் கல்லீரலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது, அதை நாம் கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கிறோம். எனினும் சில சூப்பர்ஃபுட்களின் உதவியுடன், உங்கள் கல்லீரலுக்கு புத்துணர்ச்சி அளிக்கலாம்
நெல்லிக்காய் கல்லீரல் நச்சுக்களை நீக்கும் மிகச்சிறந்த உணவில் முதலிடம் பிடிக்கும் என்றால் மிகையில்லை. இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள், ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.
எலுமிச்சை எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்ல, உங்கள் கல்லீரலைப் புத்துணர்ச்சியடையச் செய்யும். இதில் உள்ள ஏராளமான வைட்டமின் சி கல்லீரலை சுத்தப்படுத்தும் என்சைம்களை ஆக்டிவேட் செய்கிறது. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிந்து குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள கொழுப்புகள், அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.
பூண்டில் உள்ள கந்தகச் சேர்மங்கள் கல்லீரலின் டிடாக்ஸ் செயல்பாட்டை தூண்டுகின்றன. இது உடலில் இருந்து நச்சு கூறுகளை அகற்றும் என்சைம்களை ஆக்டிவேட் செய்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு பச்சை பூண்டு பற்களை மென்று சாப்பிடுங்கள். சில நாட்களிலேயே வித்தியாசம் தெரியும்.
உங்கள் தினசரி வழக்கத்தில், காபி டீக்கு பதிலாக க்ரீன் டீயை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக கேட்டசின்கள், கல்லீரலின் வீக்கத்தைக் குறைத்து, கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் க்ரீன் டீ குடிப்பதன் மூலம் உங்கள் கல்லீரலுக்கு ஊட்டம் கிடைக்கும்.
பீட்ரூட் இரத்த சோகையை நீக்கும் ஆற்றல் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கல்லீரலை டீடாக்ஸ் செய்யவும் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில், இதில் கல்லீரலை சுத்தப்படுத்தி இரத்தத்தை தூய்மையாக வைத்திருக்கும் பீட்டாலைன்கள் காணப்படுகின்றன. இதனை சாறு, சாலட் அல்லது காய்கறி வடிவில் சாப்பிடலாம்.
மஞ்சள் இந்திய சமையலறையில் உள்ள மிகச்சிறந்த மசாலா. இதில் உள்ள குர்குமின் என்ற தனிமம் கல்லீரலின் வீக்கத்தைக் குறைத்து பாதிப்பைக் குணப்படுத்துகிறது. இரவில் தூங்கும் முன் மஞ்சள் பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.