சுறுசுறுப்பான மூளை முதல் ஆரோக்கியமான இதயம் வரை... வியக்க வைக்கும் சீதாப்பழம்

பழங்கள் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது, ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு போன்றவை தான் நம்மில் பலருக்கு இதனை வாங்கும் ஆர்வமும் இருப்பதில்லை. சீதாப்பழம் என்பது அன்னாசி, வாழைப்பழம் போன்ற வெப்பமண்டல பழ வகையை சேர்ந்தது. 

சீதாபழத்தின் வெளிப்புற தோல் கடினமானதாக இருக்கும்.  உள்ளே வெள்ளை நிற க்ரீம் போன்ற சதை மிக சுவையானது. இதனை கொட்டை நீக்கி சாப்பிட வேண்டும். சீதாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்ன, சீதாப்பழத்தை  உட்கொள்வதன் மூலம் பெறக்கூடிய எண்ணற்ற ஆரோக்கிய ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

1 /9

சீதாப்பழம் மூக்கை துளைக்கும் மணத்தை கொண்டது.  இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து உள்ள எண்ணற்ற ஆண்டி ஆக்ஸிடண்ட்களும் நார்ச்சத்தும் மிகுதியாக உள்ளன. அதில் ஏராளமான கருப்பு நிற கொட்டைகளும் இருக்கும். இந்த விதைகளை நாம் நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். சதைப் பகுதி இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கும்.  

2 /9

ஆரோக்கிய நன்மைகள்: வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சீதாப்பழம்,  மூளை, இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் வீக்கத்தைக் குறைத்தல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

3 /9

மூளை ஆரோக்கியம்: சீதாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஏராளமாக உள்ளதால், மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவுவதோடு, மூளை நரம்புகளை தளர்த்தி, எரிச்சல், பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பல்வேறு மனித உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

4 /9

இதய ஆரோக்கியம்: உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சீதாப்பழத்தில் உள்ளதால், இதய நோய் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்கள் உடலை தாக்காமல் பாதிகாக்கும். அதோடு கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது.

5 /9

கண் ஆரோக்கியம்:  சீதாப்பழத்தில் கரோட்டினாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட் எனப்படும் லுடீன் நிறைந்திருப்பதால், முதுமை காரணமாக மாகுலர் சிதைவை உருவாக்கும் வாய்ப்புகளை குறைத்து கண்புரை போன்ற பிற கண் பிரச்சினைகளுக்கு எதிராக செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

6 /9

செரிமான ஆரோக்கியம்: சீதாப்பழம் கரையக்கூடிய நார்சத்து நிறைந்துள்ளதால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பெருக்கி செரிமானப் பாதையை பாதிக்கக்கூடிய அழற்சி நிலைகளை தடுக்க உதவுகின்றன.

7 /9

உயர் இரத்த அழுத்தம்: சீதாபழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த நாளங்களை தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

8 /9

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்: சீதாப்பழத்தில், உள்ள ஃபிளாவனாய்டுகள் போன்ற சில சேர்மங்களான எபிகல்லோகேடசின், எபிகாடெசின்மற்றும் கேடசின் போன்றவை புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.   

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.